Vishal 34:'தெறிக்கிறது ரத்தம்’ – விஷாலின் 34ஆவது படத்தின் டீஸர்,பெயர் வெளியீடு

விஷால் – இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், மார்க் ஆண்டனி 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. ஹிந்தியிலும் இந்தத்திரைப்படம் டப் செய்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் நடித்து வந்தார். இது நடிகர் விஷாலின் 34ஆவது படம் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் விஷால் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிந்துள்ளார். அதன்படி, இப்படத்தின் பெயர் ரத்னம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் ஷாட் டீஸர் லிங்க் அதில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் விஷால், ’நல்லபடியாக அமைந்து இது என்னுடைய 34ஆவது படம். ரத்னம் படத்தின் முதல் ஷாட்டை பகிர்வதில் மகிழ்ச்சி. இயக்குநர் ஹரியுடன் மூன்றாவது முறையாக இணைகிறேன். ராக்ஸ்டார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் முதன்முறையாக நடிக்கிறேன். இந்தப்படத்தின் ரிலீஸ் ஆனது 2024ஆம் ஆண்டு மே மாதம் இருக்கலாம். உங்களுக்கு இப்படம் பிடிக்கும். கஷ்டப்பட்டு செய்த பணி தோற்காது. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’என்றார்.

ரத்னம் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். தவிர, சமுத்திரக்கனி, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியப்பணிகளை ஹரி செய்ய, இசையினை தேவிஸ்ரீ பிரசாத் அமைத்துள்ளார். படத்துக்கான ஒளிப்பதிவை எம். சுகுமாரும், தயாரிப்பினை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் கார்த்திகேயன் சந்தானமும், ஸி ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *