Today Rasipalan (12.10.2023):கொஞ்சம் பொறுமையா இருங்க? -12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மேஷம்

போட்டி நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் உதவி கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். பணவரவுகள் மேம்படும். புதிய வாய்ப்புகள் நாடி வரும்.

ரிஷபம்

புகழ் நிறைந்த நாளாக அமையும். புரியாத சில விஷயங்கள் எளிதில் புரியும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும்.

மிதுனம்

பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். சொந்த பந்தங்களின் சந்திப்பு ஏற்படும். எதிர்பாராத சில செய்திகளால் கையிருப்புகள் குறையும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். தன்னம்பிக்கை மேம்படுத்தும்.

கடகம்

லாபம் நிறைந்த நாளாக அமையும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். அரசு வகையில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.

சிம்மம்

ஆதாயம் நிறைந்த நாளாக அமையும். மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் மேம்படும். தொழில் சார்ந்த உதவிகள் சாதகமாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.

கன்னி

விமர்சன பேச்சுக்கள் ஏற்படும். தேவையற்ற கருத்துகளைத் தவிர்க்கவும். கொள்கைப் பிடிப்பு குணம் அதிகரிக்கும். நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

துலாம்

நிம்மதி நிறைந்த நாளாக அமையும். எதிர்மறையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பொறுமையைக் கையாளவும். சக ஊழியர்களால் ஆதரவின்மையான சூழல் உண்டாகும்.

விருச்சிகம்

தெளிவு நிறைந்த நாளாக அமையும். பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்கும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான சூழல் உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலைகள் நிலவும்.

மகரம்

நிதானம் வேண்டிய நாளாக அமையும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வேலையாட்களால் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும்.

கும்பம்

நட்பு நிறைந்த நாளாக அமையும். உடனிருப்பவர்களிடம் கனிவு வேண்டும். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படவும். எதிராக இருந்தவர்களின் பலம் குறையும். மனதில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும்.

மீனம்

மாற்றம் நிறைந்த நாளாக அமையும். வாழ்க்கைத் துணைவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும். பொறுப்புகள் வழங்குவதில் சிந்தித்துச் செயல்படவும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *