மேஷம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். ஆடம்பரத்தைக் குறைத்துச் சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும்.
மிதுனம்
உடன்பிறந்தவர்களால் நன்மை வந்து சேரும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.
கடகம்
உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். குழந்தைகளிடத்தில் கனிவு வேண்டும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளால் மனதில் சில சஞ்சலங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் மீதான எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொள்ளவும்.
சிம்மம்
மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
நீண்ட நாள் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கான சூழல் அமையும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள்.
விருச்சிகம்
நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். திருப்தியற்ற மனநிலை குறையும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். பயணங்களில் நிதானம் வேண்டும். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்படும்.
தனுசு
எதையும் செய்து முடிக்க முடியும் என்ற சாமர்த்தியம் மேம்படும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும்.
மகரம்
உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஒத்துழைப்பு உண்டாகும்.
கும்பம்
உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதைக் குறைத்துக் கொள்ளவும். எதிலும் பகுத்தறிந்து செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் தோன்றி மறையும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தாமதமாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் சில அலைச்சல்கள் ஏற்படும்.
மீனம்
திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் நன்மையைத் தரும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.