TNPSC Exam Postponed: புயல் எச்சரிக்கையால் டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி. ) என்பது தமிழக அரசின் ஒரு துறையாகும்.

டிசம்பர் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு, மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன.

இது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 310 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர பிரதேச மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோர பகுதியினை 04.12.2023 அன்று முற்பகல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதன் பிறகு வடக்கு திசையில் நகர்ந்து 05.12.2023 அன்று முற்பகல் தெற்கு ஆந்திர பிரதேசத்தின் கடற்கரையை நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே மணிக்கு 80 முதல் 100 கி.மீ. பலத்த காற்றுடன் புயலாக கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்ககப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு, மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு.

இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் இதன் பெயர் தி மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன். மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957இல் இது மெட்ராஸ் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்று மாறிவிட்டது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *