Stolen Gold: மழை வெள்ளத்தில் வீடுகளில் திருடிய மனிதநேயமற்ற திருடர்கள் – 60 சவரன் நகை, ரூ.3 லட்சம் அபேஸ்

மழை வெள்ளத்தில் வீடுகளில் புகுந்து 60 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது. 

மிக்சாங் புயல் டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 4ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையாகப் பெய்தது.

மேலும் சென்னையில் வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் ஆகியப் பகுதிகளில் மார்பளவு நீர் சூழ்ந்தது. இதனால் உயிர்ப்பலியைத் தவிர்க்க துண்டிக்கப்பட்ட மின்சாரத்தினால், பலர் மின் மோட்டாரை இயக்கமுடியாமல் குடிக்கவும், இயற்கை உபாதைகளை சரிசெய்யவும் நீர் இல்லாமல் தவித்தனர். அதன்பின் படிப்படியாக வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்புக்குழுவினர் படிப்படியாக மீட்டனர். உணவுப்பொருட்களை வழங்கினர்.

இதனிடையே முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் மழை வெள்ளத்தைப் பயன்படுத்தி சிலர் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக வரதராஜபுரம் பகுதியில் இருக்கும் விஷ்ணு என்ற அடுக்குமாடி குடியிருப்பில், 17 வீடுகளைச் சார்ந்தவர்கள், மழை வெள்ளம் சூழ்ந்ததால், வீட்டைப் பூட்டிவிட்டு, உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அவர்களில் 6 குடும்பத்தினர், வெள்ள நீர் வடிந்து தங்களது குடியிருப்புக்கு வந்ததும், அவர்களது வீடுகளில் நகை, பணம் திருடுபோயிருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, சரத்குமார் என்பவர் வீட்டில் 17 சவரன் தங்க நகையும், ரூ.2 லட்சம் பணமும் திருடுபோயுள்ளது. அதேபோல், கண்ணன் என்பவரது வீட்டில் 15 சவரன் நகையும், விஜயலட்சுமி என்பவரது வீட்டில் 7 சவரன் நகையும், ஒரு லட்ச ரூபாய் பணமும் திருடுபோயுள்ளது. அதேபோல், அருண் என்பவர் வீட்டில் 15 சவரன் நகை என மொத்தம் 60 சவரன் நகை மற்றும் சுமார் ரூ.3 லட்சம் ரொக்கமும் திருடப்பட்டுள்ளது.

முன்னரே, இப்பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்பு 50 சவரன் நகை இருக்கும் நிலையில் குற்றவாளிகள் ஒருவரையும் போலீஸார் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *