STF உடனான துப்பாக்கிச்சூட்டில் தேடப்படும் முன்னாள் கமாண்டோ கொல்லப்பட்டார்

தலங்கமவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) தெரிவித்துள்ளது.

ஹன்வெல்லவில் STF அதிகாரிகளுடனான மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபராக உயிரிழந்தவர் என நம்பப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், தலங்கம, ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் வைத்து 44 வயதுடைய நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *