Sani Sukra: சனியும் சுக்கிரனும் சம்பவம்.. பணக்கட்டிலில் படுக்கப் போகும் ராசிகள்

சனிபகவான் நீதிமானாக விளங்க கூடியவர். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. கர்ம வினைகளுக்கு இரட்டிப்பாக பலன்களை திருப்பிக் கொடுப்பார். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். மேலும் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். மங்கள கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் அவர் 2024 ஆம் ஆண்டு கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகின்றனர் அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கையானது உங்களுக்கு மிகப்பெரிய பலன்களை வரும் 2024 ஆம் ஆண்டு தரப் போகின்றனர். காரியங்கள் அனைத்தும் நடக்கும். சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் பணம் வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண வரவிற்கான வாய்ப்புகள் அனைத்தும் அமையும்.

ரிஷப ராசி

சனி மற்றும் சுக்கிர சேர்க்கை உங்களுக்கு புத்தாண்டை சிறப்பாக மாற உள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் இருந்த சிக்கல்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மேஷ ராசி

வரும் 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டம் ஆண்டாக அமையப்போகின்றது. சனியும் சுக்கிரனும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளதால் உங்களுக்கு பணவரவில் முன்னேற்றம் உண்டாகப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். புதிய வருமானங்களுக்கான சூழ்நிலைகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பளம் உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *