Rewind 2022: நயன்தாரா, ஹன்சிகா, அலியா பட் 2022-ல் திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்

ஹன்சிகா, ஆலியா பட், நயன்தாரா என 2022-ல் திருமணம் செய்துகொண்ட திரைப்பிரபலங்கள் பற்றிய ஒரு ரீவைண்டு தான் இது.

மெளனி ராய் – சூரஜ்: சன் டிவியில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த டப்பிங் தொடர், நாகினி. இந்தத் தொடரில் கதாநாயகியாக நடித்த மெளனி ராய், கேரளாவைச் சேர்ந்த சுராஜ் என்பவரை ஜனவரி 27 அன்று கோவாவில் ஹில்டன் கோவா ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டனர்.

கரிஷ்மா தன்னா: நடிகை கரிஷ்மா தன்னா ரியல் எஸ்டேட் முதலீட்டாளரான வருண் பங்கேராவை பிப்ரவரி 5 ஆம் தேதி மும்பையில் திருமணம் செய்துகொண்டார்.

விக்ராந்த் மாஸ்ஸி-ஷீத்தல் தாக்கூர்: ‘Broken But Beautiful’ படப்பிடிப்பின்போது நெருக்கமாகப் பழகிவந்த பாலிவுட் நட்சத்திரங்களான விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் ஷீத்தல் தாக்கூர் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

ஷிபானி தண்டேகர்-ஃபர்ஹான் அக்தர்: பாடகர் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஷிபானி தண்டேகர், நடிகர் மற்றும் இயக்குநரான ஃபர்ஹான் அக்தரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிரா ஜாவேத் அக்தரின் மாளிகையில் நடைபெற்றது.

ஆலியா பட் – ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர்-அலியா பட்: பாலிவுட் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் திருமணம் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி இவர்களின் திருமணம் மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் நடைபெற்றது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்

நயன்தாரா-விக்னேஷ் சிவன்: தமிழ்த் திரையுலகின் கலர்புல் காதல் ஜோடியான நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்திலுள்ள ஷெரட்டன் கிராண்ட்-ல் திருமணம் செய்துகொண்டனர்.

பயல் ரோஹத்கி-சங்கராம் சிங்: பாலிவுட் நட்சத்திரமான பயல் ரோஹத்கி மற்றும் மல்யுத்த வீரர் சங்கராம் சிங் இருவரும் ஜூலை மாதம் ஆக்ராவில் திருமணம் செய்து கொண்டனர்.

ரிச்சா சதா-அலி பைசல்: ‘பக்ரி’ படத்தில் ரிச்சா சதாவுடன் நடித்த நடிகர் அலி பைசலும், ரிச்சா சதாவும் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தீப்பெட்டி போலிருந்த அவர்களின் திருமண அழைப்பிதழ் சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகியிருந்தது.

ஆதி – நிக்கி

ஆதி – நிக்கி: `நீ கவிதைகளா… கனவுகளா’ என படத்தில் காதலில் உருகி டூயட் பாடிய ஆதியும், நிக்கி கல்ராணியும் நிஜத்திலும் காதலித்து மே 18ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

ஹன்சிகா- சோஹைல் கதுரியா: மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கதுரியா, ஹன்சிகா மோத்வாணி இருவரும் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் முந்தோடா கோட்டையில் டிசம்பர் 4 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்துகொண்டனர்.

‘தேவராட்டம்’ படத்தில் ஜோடியாக நடித்திருந்த கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் நவம்பர் 28ஆம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *