Rain Alert: ’காலை 10 மணி வரை 15 மாவட்டங்களை வெளுக்க போகும் மழை!’ வந்தது புதிய எச்சரிக்கை!

”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது”

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும், இதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் புதிய புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே இன்று காலை 10 மணி வரை கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல் உடன் கூடிய மிதமான மழையும்,

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைகால் பகுதிகளில் கடந்த அக்டோபர் ஒன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை பதிவான மழையின் அளவு 24 செ.மீ; சராசரி அளவு 27 செ.மீ என்பதால் இல்பை விட 13 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை பதிவாகி உள்ள நிலையில், இன்றைய தினம் காலை 7 மணி முதல் அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *