Leo FDFS: ரிலீஸுக்கு முன்னரே ஷாருக்கின் ஜவான் படத்தை முந்திய தளபதியின் லியோ

ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு புக்கான அட்வான்ஸ் டிக்கெட்டை காட்டிலும் லியோ படத்துக்கு குறைவுதான்.

தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் லியா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் படம் வெளியாகிறது.

படம் வெளியீடு குறித்தும், அதன் முதல் காட்சி குறித்த பல்வேறு சர்ச்சைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்க, வியாபார ரீதியாக ரிலீஸுக்கு முன்னரே வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது லியோ திரைப்படம். ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் லியோ, இந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிக அளவிலான அட்வான்ஸ் புக்கிங் செய்து சாதனை புரிந்துள்ளது.

இதுவரை லியோ படத்துக்காக 16 லட்சம் டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், ரலீஸ் ஆவதற்கு முன்னர் இந்த எண்ணிக்கையானது 20 லட்சமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த மாதம் வெளியான பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஜவான் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ஜவான் திரைப்படம் ஓபனிங் நாளில் 15.75 லட்சம் டிக்கெட்டுகள் புக்காகின. இதையடுத்து லியோ படத்தின் தமிழ் பதிப்பு 13.75 லட்சம் டிக்கெட்டுகளும், தெலுங்கு 2.10 லட்சம், இந்தி 20 ஆயிரம் டிக்கெட்டுகள் ஓபனிங் ஷோவுக்காக புக்கிங் செய்யப்பட்டுள்ளன.

இத்தனை டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டிருந்தாலும் ஜவான் வசூலை விட லியோ வசூல் குறைவாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் டிக்கெட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை அமைந்துள்ளது. ஜவான் படத்துக்கான சராசரி டிக்கெட் விலை ரூ. 251 என இருந்த நிலையில், லியோ படத்துக்கு ரூ. 202 என உள்ளது. ஜவான் படம் அட்வான்ஸ் புக்கிங் மூலம் ரூ. 41 கோடி வசூலித்த நிலையில், லியோ ரூ. 31 கோடி வசூல் செய்துள்ளது.

லியோ படத்தின் ரிலீஸுக்கு தமிழ்நாட்டில் கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் காலை 7 அல்லது 9 மணிக்கே முதல் காட்சியானது திரையிடப்படவுள்ளது. அத்துடன் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை நாள்தோறும் 5 காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தின் நீளம் 2 மணி நேரம் 43 நிமிடங்களாக உள்ளது. ரத்தம் தெறிக்கும் விதமாக ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இடம்பிடித்திருப்பதால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *