உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களை இலங்கைக்கு அழைக்கவும் சோல்ஹெய்ம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான அனைத்து உலகளாவிய நிறுவனங்களையும் மாநாட்டிற்கு அழைக்குமாறு முன்மொழிந்துள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பில் நேற்று (டிசம்பர் 20) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் உள்ளூர் ஆலோசகர் ருவான் விஜேவர்தன, இவ்வாறான மாநாடு இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் நன்மை பயக்கும் என தெரிவித்துள்ளார்.

விஜேவர்தன மற்றும் சொல்ஹெய்ம் தலைமையில் காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் திட்டங்களுக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பது குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *