HT Temple SPL: புதன் தோஷம் நீக்கும் பலன் கொடுக்கும் திருக்கச்சிநெறி காரைக்காடு சிவன்!

சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் இது 234வது தேவாரத் தலமாகும். அதே போல் தொண்டை நாட்டு தலங்களில் 2வது தலமாகவும் போற்றப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் திருக்கோயில்கள் எண்ணற்றவை அமைந்துள்ளன. மன்னர் காலத்தில் சிவகாஞ்சி, விஷ்ணு காஞ்சி, ஜைன காஞ்சி, பெளத்த காஞ்சி என நான்கு பகுதிகளைக் கொண்டு காஞ்சிபுரம் நகரம் விளங்கியது.

இதில் சைவ ஆலயங்களில் திருக்கச்சி ஏகம்பம், திருமேற்றளி, ஓணகாந்தன்தளி, திருக்கச்சி நெறிக்காரைக்காடு, திருக்கச்சி அநேக தங்காவதம் என 5 தேவாரப் பெற்ற தலங்களும், கச்சி மயானம் இடபேஸ்வரம் என இரு வைப்புத் தலங்களும் அமைந்துள்ளன. இதில் திருக்கச்சி நெறிக் காரைக்காடு என்ற தேவாரத் தலமே இன்று திருக்காலிமேடு என மருவி வழங்கப்படுகிறது.

சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் இது 234வது தேவாரத் தலமாகும். அதே போல் தொண்டை நாட்டு தலங்களில் 2வது தலமாகவும் போற்றப்படுகிறது. இங்குள்ள இறைவன் பெயர் சத்யநாத சுவாமி, செம்மண்ணால் உருவானவர். செம்மேனி கொண்ட இறைவன், மேற்கு முகமாய், எழிலான கோலத்தில் காட்சி தருகின்றார். இவரின் திருமேனி பார்ப்பதற்கு மிகவும் ஈர்ப்பு சக்தியுடன் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.

புதன்கிழமையன்று தீர்த்தத்தில் நீராடி, புதனுக்கு பச்சைத் துணி சார்த்தி, பச்சைப் பயறு படைத்து, ஞான காரகனாக புதனை வழிபட்டால், தோஷங்கள் நீங்கும். கோயிலுக்கு முன்புறம் இந்திரன் அமைத்த இந்திர தீர்த்தம் தலத் தீர்த்தமாக உள்ளது. இதன் கிழக்குக் கரையில் இந்திரன் வழிபட்ட விநாயகர் அமர்ந்துள்ளார். தலமரம் காரைச் செடியாகும்.

கோயிலில் எளிய நுழைவுவாயிலில் நுழைந்ததும் பலிபீடம், கொடிமரம், நந்திதேவர் சந்நிதியுடன் அமைந்திருக்கின்றன. மூன்று நிலை ராசகோபுரம் மேற்கு முகமாய் அமைந்திருக்கிறது. ராசகோபுரத்தின் உள்ளே சென்றால் அகன்ற வெளிப் பிரகாரம் உள்ளது. சங்கிலி மண்டபம், கிழக்கு நோக்கிய புதன் சந்நிதி, வடக்கு நோக்கிய சனி பகவான் சந்நிதிகள் அமையப்பெற்றுள்ளன.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *