Euro Tech – Cars: எலெக்ட்ரிக் கார்கள்தான் எதிர்காலமா? இனி கார்லயே இத்தனை வசதிகள் இருக்குமா?

இதுவரை காலமும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட டெஸ்லா கார்கள் கொழுத்த பணக்கார எலைட்கள் மட்டுமே வாங்கக் கூடியாளவுக்கு அளவுக்கு யானை விலை, குதிரை விலையிலிருந்தன. ஆனால், “இனிவரும் காலங்களில் நடுத்தர மக்களும் டெஸ்லா காரை வாங்கும் வகையில் பட்ஜெட் விலையில் கார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என்று அறிவித்துள்ளார் எலான் மஸ்க். அது மட்டுமல்ல, இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார் ஆலையைத் தொடங்குவதற்கான பேச்சு வார்த்தையைச் சமீபத்தில் எலான் மஸ்க் இந்தியப் பிரதமர் மோடியுடன் நடத்தியுள்ளார். இந்தியாவில் டெஸ்லா கார் ஆலையை நிறுவினால் ஆண்டுதோறும் சுமார் 5,00,000 எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும், இந்தியாவில் அதன் ஆரம்ப விலை ரூ.20 லட்சத்திலிருந்து தொடங்கும் என்றும் நமக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்துள்ளார் எலான் மஸ்க். நானோ கார்கள் போல ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாதான் இருக்கு ஃபினிஷிங் சரியில்லயேப்பா ரேஞ்சுக்குப் போகாமல் திட்டமிட்டபடியே தரமான அதே சமயம் பாதுகாப்பான கார்களை மக்களுக்குக் கட்டுப்படியான விலையில் கொடுக்க முடிந்தால் நல்லதுதான்.

பெரிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார் சார்ஜிங் பாயின்ட்ஸ்

பெரிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார் சார்ஜிங் பாயின்ட்ஸ்

நிலையான 12.3-இன்ச் தொடுதிரை, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஒருங்கிணைப்பு, வைஃபை ஹாட்ஸ்பாட், அட்வான்ஸ்டு நேவிகேஷன், 12-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 7-இன்ச் பின்புற இருக்கை மைய தொடுதிரை, 23-speaker Mark Levinson surround-sound stereo, போன்ற பல அட்டகாசமான அம்சங்களோடு அறிமுகமாகி உள்ள Lexus LS, Porsche Panamera, Genesis G90, Mercedes-Benz EQS, Mercedes-Benz S-Class, Tesla Model 3 போன்ற கார்கள் எல்லாம் உள்ளேறி அமர்ந்தாலே சொர்க்கத்தைக் காட்டுகின்றன.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *