Chennai Floods: ‘நாங்கள் படகு கொண்டுவந்தால் தடுப்பதா?’ தமிழக அரசை விளாசும் பாஜக!

“Chennai Floods: மக்களுக்கு உதவ அரசு உத்தரவு வேண்டும் என்கிறதா அரசு? என கேள்வி”

சென்னையை அடுத்த முடிச்சூரில் பாஜக சார்பில் கொண்டு வரப்பட்ட படகுகளை மீட்புபணிக்கு பயன்படுத்துவதற்கு தமிழக அரசு தடை விதிப்பதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

மிக்ஜாம் புயல் கரையை கடந்தாலும் சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வடியாத சூழல் நிலவி வருகிறது. வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

சென்னையில் பெய்த மழையால் நேற்று அதிகபட்சமாக காட்டுப்பாக்கம் பகுதியில் 29 செ.மீ மழை பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 24 செ.மீ, மீனம்பாக்கத்தில் 19 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகத்தில் 18 செ.மீ, நந்தனத்தில் 18 செ.மீ, பள்ளிக்கரணையில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை இயல்பை விட 29 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை சென்னையில் பெய்ய வேண்டிய சராசரி மழையின் அளவு 69 செமீ ஆக உள்ள நிலையில் தற்போது 89 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளான முடிச்சூர், மேற்கு தாம்பரம், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக மின்சாரம் ஏதும் இல்லாததால் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்களை வழங்கும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக சார்பில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகளுக்கு தமிழக அரசு தடை விதிப்பதாக தமிழ்நாடு பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் இடப்பட்டுள்ள பதிவில், “கடலூரிலும் சென்னை அருகிலுமிருந்து படகுகளை வரவழைத்து பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் உதவியோடு மாநில செயலாளர் திருமதி.மீனாட்சி நித்யசுந்தர் அவர்கள் சென்னை முடிச்சூரில் மக்களை மீட்க படகுகள் செலுத்துவதைக் கூட தடுக்க நினைக்கிறது தமிழக அரசு.மக்களுக்கு உதவ அரசு உத்தரவு வேண்டும் என்கிறதா அரசு?” என கேள்வி எழுப்பி உள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *