பாளையில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் காயமடைந்துள்ளனர்

திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பளை பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

குறைந்தது 15 பேர் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேருந்தின் அதிவேகத்தை சாரதி கட்டுப்படுத்த தவறியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *