722 நாட்களுக்கு பிறகு சதம் அடித்த கேன் வில்லியம்சன்!

பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கராச்சியில் தொடக்கியுள்ள முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றோரு பாகிஸ்தா வீரர் சல்மான், டெஸ்டில் முதல் சதம் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சவுதீ 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதனையத்து முதல் இன்னிசை தொடங்கிய நியூசிலாந்து அணி தொடக்கமே அற்புதமாகவே அமைந்தது. சிறப்பாக விளையாடிய டாம் லதாம் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கான்வே 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேன் வில்லியன்சன் சதம் அடித்தார். கிட்டத்தட்ட 722 நாட்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து ரசிகர்களின் கவலையை பூர்த்தி செய்துள்ளார் வில்லியம்சன்.

நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 440 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானை விட 2 ரன்கள் முன்னிலையில் உள்ளது. வில்லியம்சன் 105 ரன்களுக்கும், சவுதி 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அப்ரார் அகமது 3 விக்கெட்டும் அலி 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *