400 கி.மீ தூரத்துக்கு.. பெண்ணின் சடலத்தை சூட்கேஸில் எடுத்து சென்ற டாக்டர்.. காரணம் என்ன தெரியுமா? | Famous doctor arrested for killing his wife cremating body nearly 400 km away in UP

India

oi-Hemavandhana

Google Oneindia Tamil News

கான்பூர்: 400 கிமீ தொலைவிற்கு, பெண்ணின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக 2 பேர் கைதாகியும் உள்ளனர்.

நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக ஏராளமானோர் கைதாகிவரும் நிலையில், குற்றங்கள் குறையவில்லை.

அதிலும் வடமாநிலங்களில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே சிறிதும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கட்டிய மனைவி, கணவன், பிள்ளைகள் என மனசாட்சியே இல்லாமல் கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது. இப்போதும் ஒரு கொடூரம் நடந்துள்ளது.

மாதவிடாய் சார்.. பரவாயில்ல வா! பாஜக நிர்வாகி கல்லூரியில் “பகீர்” - பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது மாதவிடாய் சார்.. பரவாயில்ல வா! பாஜக நிர்வாகி கல்லூரியில் “பகீர்” – பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது

 காணோம் மனைவியை

காணோம் மனைவியை

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி நகரை சேர்ந்தவர் டாக்டர் அபிஷேக்… மனைவி பெயர் வந்தனா அவாஸ்தி.. 28 வயதாகிறது.. இவர் ஒரு ஆயுர்வேத டாக்டர். சீதாபூர் சாலையில் சொந்தமாகவே ஆஸ்பத்திரி ஒன்றை நிர்வகித்து வருகின்றனர்.. இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி தன் மனைவியை காணவில்லை என்று டாக்டர் அபிஷேக், கோத்வாலி போலீசில் புகார் தந்தார். அத்துடன், விலை உயர்ந்த சில பொருட்களை, வீட்டில் இருந்து மனைவி எடுத்து சென்றுவிட்டதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்… இந்த புகாரிரன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை

விசாரணை

விசாரணையின்போதுதான், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு வந்து போயுள்ளது தெரியவந்தது.. அதனால், அபிஷேக் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.. எனவே, சைலண்ட்டாக அவருக்கே தெரியாமல் அவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்தனர்.. பிறகு, தங்கள் பாணியில் விசாரணையை அவரிடம் துவக்கினர்.. அப்போதுதான், நடந்த சம்பவங்களை ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டார். கடந்த நவம்பர் 26ம் தேதி, மனைவியை அடித்து கொன்றுவிட்டாராம் அபிஷேக்.

 400 KM

400 KM

வழக்கம்போல் இவர்களுக்குள் சம்பவத்தன்றும் தகராறு வந்துள்ளது.. ஆத்திரத்தில் இருந்தவர், மனைவியை அடித்துள்ளார்.. இதில் மனைவி உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்துள்ளது.. இதனால், அதிர்ச்சி அடைந்த அபிஷேக், சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துள்ளார்.. பிறகு, மனைவியின் உடலை சுமார் 400 கிமீ தொலைவிற்கு கொண்டு சென்று, யாருமற்ற பகுதியில் போட்டு தீ வைத்து எரித்துள்ளார்.. இந்த கொலைக்கு அவரது அப்பாவும் உடந்தையாக இருந்துள்ளார்… இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 சூட்கேஸ்

சூட்கேஸ்

இதுபற்றி ஏஎஸ்பி அருண் குமார் சிங் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, “நவம்பர் 26ம் தேதி தம்பதிக்குள் தகராறு வந்துள்ளது.. அப்போது மனைவியை கொலை செய்த அபிஷேக், காணாமல் போனதாக போலீசில் புகார் கொடுத்துவிட்டு, அதற்கு பிறகுதான், உடலை சூட்கேசில் அடைத்து, தன்னுடைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்… அங்கு ஆம்புலன்சை வரவழைத்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள கார்ஹ் முக்தேஷ்வரில் வைத்து உடலை எரித்துள்ளார்… ஆம்புலன்ஸ் டிரைவரிடம், தன் மனைவி விபத்தில் இறந்துவிட்டதால் அவசரமாக தகனம் செய்வதற்கு செல்வதாக கூறியிருக்கிறார்” என்றார்.

English summary

Famous doctor arrested for killing his wife cremating body nearly 400 km away in UP

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *