40 கிமீ பயணத்தில் 3 முறை பாலியல் பலாத்காரம்.. துணிச்சலாக பெண் செய்த சம்பவம்.. சிக்கிய குற்றவாளி

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ரயிலில் சென்று கொண்டிருந்த பெண் பயணி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவம் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள பகாரியா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது, பாத்ரூம் செல்வதற்காக பெண் பயணி ஒருவர் தான் வந்த ரயிலில் இருந்து இறங்கி எதிரே நின்ற மற்றொரு ஏசி ரெயிலில் ஏறியுள்ளார். இதைக் கவனித்த கமலேஷ் குஷ்வாகா என்ற 22 வயது வாலிபர், அந்த பெண்ணுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

ஏசி பெட்டியில் பெண் பயணி ஏறியதும் பின்னாலேயே ரயிலில் சென்றுள்ளார். அப்போது திடீரென பெண்ணை பலமாக இடித்து தள்ளியிருக்கிறார். இதில் நிலை தடுமாறிய அந்த பெண் கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் அடியும் பட்டு இருக்கிறது. இந்த சமயத்தில் நின்று கொண்டிருந்த ஏசி ரயிலும் புறப்பட தொடங்கியது. இதைத் தொடர்ந்து ரயிலில் வைத்தே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளர்.

அந்த பெண் மறுப்பு தெரிவித்த போது கொலை செய்து விடுவேன் என மிரட்டியும் உள்ளார். 40 கி.மீட்டர் தொலைவுக்குள் மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை படுத்தியுள்ளார். சாத்னா ரயில் நிலையத்திற்குள் ரயில் வந்துள்ளது. அப்போது தனக்கு தாகம் எடுப்பதாக பெண் கதறியுள்ளார். இதனால், ரயில் நிலைய பிளாட்பார்மில் கமலேஷ் இறங்கியதும்.. உஷரான பெண் ரயிலில் இருந்து அரைகுறை ஆடையுடன் ஓடியுள்ளார். நேராக ரயில் நிலைய காவலரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார்.

உடனே உஷாரான ரயில்வே போலீசாரும் கமலேஷை பிடிக்க முயற்சித்தனர். அதற்குள் ரயிலுக்குள் எறிய கமலேஷ், ஏசி கோச்சை பூட்டினார். இதனால் அங்கு பணியில் இருந்த ஒரு போலீஸ் ரயிலில் பயணம் செய்ய சில போலீசார் சாலை வழியாக கயிமா ரயில் நிலையத்திற்கு சென்றனர்.

ரயில் கயிமா ஸ்டேஷனுக்கு வந்து நின்றது. அப்போது குற்றவாளி பெட்டியை திறக்காமல் இருந்ததால், மெக்கானிக்கை வரவழைத்து கதவை திறந்த போலீசார் உள்ளே சென்று குற்றவாளியான கமலேஷை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *