3வது டி20: இங்கிலாந்து அமர்க்களம்

கிரெனடா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது டி20ல், இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. செயின்ட் ஜார்ஜ் நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச… வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன் குவித்தது. பூரன் 82 ரன் (45 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), ஹோப் 26, கேப்டன் பாவெல் 39, ரூதர்போர்டு 29 ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் அடில் ரஷித், சாம் கரன் தலா 2, மொயீன், டாப்லி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து வென்றது. கேப்டன் பட்லர் 51, வில் ஜாக்ஸ் 1, லிவிங்ஸ்டன் 30 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் பில் சால்ட் 109 ரன் (56 பந்து, 4 பவுண்டரி, 9 சிக்சர்), ஹாரி புரூக் 31 ரன் (7 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரஸ்ஸல், ஹோல்டர், குடகேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சால்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என முன்னிலை வகிக்க, 4வது போட்டி டிரினிடாடில் நாளை மறுநாள் நடக்கிறது.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *