2024 புத்தாண்டு ராசி பலன்: வீடெங்கும் பண மழை.. 2024ல் திடீர் ஜாக்பாட் யாருக்கு அடிக்கும்?

சென்னை: 2024 ஆம் ஆண்டு இன்னும் சில வாரங்களில் பிறக்கப்போகிறது. 2023ஆம் ஆண்டில் எத்தனையோ சோதனைகளை கடந்து வந்திருக்கிறோம். பிறக்கப்போகும் புத்தாண்டு எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது. நல்ல வேலை யாருக்கு கிடைக்கும்? நிதி நிலைமை எப்படி இருக்கும் என்று பலரும் யோசிக்கிறார்கள். தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் 2024ஆம் ஆண்டு முதல் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.

தனுசு:

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு வெற்றி மீது வெற்றி தேடி வரப்போகிறது. தொட்டதெல்லாம் பொன்னாகப்போகிறது. வியாபாரம் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். ஏழரை சனியால் கஷ்டங்களை சந்தித்தவர்களுக்கு இனி நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படப்போகிறது. படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வீடு மனை வாங்கும் யோகம் கைகூடி வந்துள்ளது. திருமணம் சுபகாரியம் நடைபெறும். 2024 ஆம் ஆண்டு மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நிறைந்த ஆண்டாக பொருளாதார வளர்ச்சி நிறைந்த ஆண்டாக தனுசு ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது.

மகரம்:

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு உங்களுக்கு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். நிதி நிலைமை சீரடையும். பொருளாதார வளம் சிறப்படையும். வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைந்துள்ளது.

கும்பம்:

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் கவலைகள் தீரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் கொட்டப்போகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் கை நிறைய சம்பளமும் கிடைக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்த வீடு வாங்கலாம். வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். கும்ப ராசிக்காரர்களுக்கு மனக்கவலைகள் நீங்கும் ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைந்துள்ளது.

மீனம்:

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். புது வேலைக்காக செய்யும் முயற்சிகள் வெற்றியை தரும். ஆலய தரிசனம் மன அமைதியை கொடுக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். பணம் பலவழிகளில் இருந்தும் வரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நிறைந்த ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைந்துள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *