156 ஆண்டுகளாக அணையாத அடுப்பு – தினமும் 1,000 பேருக்கு வயிறார அன்னதானம்!

அருட் பெரும் ஜோதி வள்ளலாரை பற்றி அறியாதவர்கள் கூட அவரின் ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ எனும் இந்த பிரபல வாக்கியத்தை நிச்சயம் கேட்டு இருப்பார்கள். கடலூர் மாவட்டம் வடலூரில் 1867-ம் ஆண்டு, மே மாதம் 23-ம் தேதி வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு சாமானியர்களின் பசியைப் போக்குவதற்காக இன்னமும் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. இன்றைய தேதிக்கு தினமும் 1,300 முதல் 1,500 பேரின் பசியைப் போக்கி வருகிறது வள்ளலார் மூட்டிய இந்த அணையா அடுப்பு. இது நிச்சயம் தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய அற்புத இடமாகும்!

தமிழக ஆன்மீக தலைவர்களில் மிகவும் பிரதானமானவர் – வள்ளலார்

தமிழ்ச் சங்கத்தில் வாழ்ந்த பல ஆன்மிக தலைவர்களுள் இராமலிங்கம் எனும் வள்ளலாரும் ஒருவர். உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர். இந்த உலகத்தில் நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும் பரவ வேண்டும் என்று கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் திருவருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கிய வள்ளலார்கடவுளின் பெயரில் செய்யப்படும் உயிர்ப்பலியை தடுத்து நிறுத்தினார். மக்களின் பசியை போக்குவதற்காக தருமசாலையை தொடங்கினார். சமய சமரச சுத்த சன்மார்க்கம், சத்திய ஞானசபை போன்றவற்றை நிறுவியுள்ளார்.

vallaraduppu1

இன்று வரை எரியும் 1867 ஆம் ஆண்டு மூட்டப்பட்ட அடுப்பு

ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல், அனைவரையும் தாக்கும் பிணி பசி என்று நம்பியவர் திரு. வள்ளலார் அவர்கள். அதைப் போக்குவதே மாபெரும் தருமம் என்று போதனை செய்தார். அதற்குத் தானே முன்னுதாரணமாகுமாறு, 1867-ம் ஆண்டு வைகாசி மாதம் 11-ம் நாள் வடலூரில் சத்திய தருமச்சாலையை நிறுவினார். அப்போது, அவர் கையால் மூட்டப்பட்டதுதான் இங்கு உள்ள அணையா அடுப்பு’.

தினமும் 1000 பேருக்கு அன்னதானம்

இன்றுவரை, தருமச்சாலையின் தனிச்சிறப்பு அந்த அணையா நெருப்பு. பலரின் பசியைப் போக்குவதே அதன் பொறுப்பு. கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் சுனாமி, புயல், வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தபோதும் தடையின்றி மக்களுக்கு உணவு வழங்கி ஆதரித்துள்ளது இந்த தருமசாலை. எந்தச் சூழலிலும் இந்த நெருப்பு அணைந்தது இல்லை. இங்கு தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு, ஒவ்வொரு வேளைக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

vallar history

கொரோனா காலகட்டத்திலும் பசியை போக்கிய அணையாத நெருப்பு

“உலகத்தில் தர்மம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது, இந்த அடுப்பு உள்ளவரை தர்மம் அணையாது” என்று வள்ளலார் சொன்னது போலவே தர்மத்தின் துணையால் அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது ஏழைகளுக்குச் சோறு படைக்கும் அடுப்பு. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில், தினந்தோறும் வழங்கப்பட்ட அன்னதானம் பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டது. ஆனால், வடலூர் தர்மசாலை மட்டும் எந்த ஒரு தடங்கலுமின்றி ஆதரவற்றவர்களின் பசிப்பிணியை அனுதினமும் போக்கிக் கொண்டிருக்கிறது. அனைவரையும் முடக்கி வைத்திருந்த கொரோனா கால கட்டத்திலும் கூட தினமும் 1500 பேருக்கு அன்னதானம் வழங்கி பசியை போக்கியது இந்த அணையாத நெருப்பு.

அள்ள அள்ள குறையாத தானியங்கள்

156 ஆண்டுகளாக அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற எரிந்துகொண்டே இருக்கிறது வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு. அதை அணையாமல் காப்பாற்ற ஆயிரக்கணக்கான தர்ம சிந்தனையுள்ள நெஞ்சங்கள் அங்குள்ள தானியக் களஞ்சியங்களை நிரப்பிக்கொண்டே இருக்கின்றன.எந்த நேரத்திலும் சுமார் ஆறு மாதங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றைச் சேமிப்பில் வைத்திருப்பதால், தொடர்ந்து உணவு வழங்க முடிகிறது என்கின்றனர் ஆலய நிர்வாகிகள்.

அனைவரும் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஆலயம்

யோகா’ தியானம் போன்றவற்றில் அக்கறை கொண்டு ஞான நிலை அடைந்த வள்ளலார், அவர் உலக மக்கள் அனைவருக்கும் தக்க பல உயரிய கொள்கைகளை உலகத்திற்கு வலியுறுத்து சென்றுள்ளார். வள்ளலார் அவர்கள் அவரின் ஆன்மிக கொள்கை இன்றளவும் அவர்கள் பரப்பப்பட்டு பின்பற்று வருகின்றன. இந்த ஆலயத்திற்கு வாழ்வில் ஒருமுறையேனும் நாம் சென்று வர வேண்டும். தர்மம், பசி, வாழ்க்கை ஆகியவற்றின் புரிதலை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.

எப்போது, எப்படி செல்வது?

தினமும் ஆயிரக்கணக்கான மக்களின் பசியை போக்கும் இந்த ஆலயம் கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உருவ வழிபாடு கிடையாது. ஜோதி வடிவத்தில் காட்சி தரும் இறைவனை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் தரிசிக்க வேண்டும். தை பூசம் அன்று தான் வள்ளலார் பெருமான் அணையாத நெருப்பை மூட்டினார். இன்று வரை இந்த நிகழ்வு இன்று வரை பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. கடலூர் தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து நன்கு அணைக்கப்பட்டுள்ளது. கடலூர் இருந்து வடலூருக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *