+1 ரிசல்ட் வெளியீடு.. புதுச்சேரியில் 88.29% பேர் தேர்ச்சி!

புதுச்சேரியில், 10ஆம் தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியான நிலையில், தற்போது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, புதுச்சேரியில் 88.29% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 12,045 பேரில், 5801 ஆண் மாணவர்களும், 6244 பெண் மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 84.21%, பெண்கள் 92.07 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2023ம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 13ஆம் முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்தது. இந்த பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *