ஸ்பாட்டுக்கே போயிட்டாரு.. பனை மரத்து உச்சியிலே \"முறைக்கிறது\" யார்னு பாருங்க.. நொந்துபோன நாகை ஆபீசர்ஸ்

நாகை: கஜா புயலில் இறந்த தனது தாயின் நிவாரண நிதியை தராத அதிகாரிகளை கண்டித்து பனை மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா பனையங்காடை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது அம்மா பெயர், அம்மாளு அம்மாள்,.. இவர் கடந்த 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலில் இறந்துவிட்டார்.

இவர் உயிரிழந்த மறுநாளே, போஸ்ட் மார்ட்டமும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை ராமச்சந்திரன் வாங்கி வைத்திருக்கிறார்.

10 லட்சம் நிவாரணம்: அரசு அறிவித்த, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கேட்டு 5 ஆண்டுகளாக வருவாய் துறையினரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட முறை மனு அளித்திருக்கிறார். ஆனால் 5 வருடங்கள் ஆகியும் அரசு அறிவித்த ரூ.10 லட்சம் தொகையை வருவாய் துறையினர் வழங்க மறுக்கிறார்களாம்.. இது தொடர்பாக கேட்க போனால், வருவாய்த் துறையினர் பல்வேறு காரணங்களை சொல்லி, நிவாரணம் அளிக்க மறுத்துவிடுகிறார்களா.

இதனால் உச்சக்கட்ட வெறுப்படைந்த ராமச்சந்திரன், மனமுடைந்து போனார்.. பணத்தை தராமல், தொடர்ந்து அதிகாரிகள் அலைக்கழித்து வருவதால், பனை மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள கடிதம் எழுதி, அதை வருவாய்த்துறைக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

கடிதம்: அந்த கடிதத்தில் சொன்னபடியே, இன்று காலை 9 மணிக்கு, தோப்புத்துறை ரயில்வே நிலையம் பக்கத்திலிருக்கும், பனை மரத்தோப்புக்கு சென்றார்.. அங்கே 80 அடி உயரமிருக்கும் ஒரு பனைமரத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.

அரசு அறிவித்த நிவாரணத்தொகையை உடனே வேண்டும், என்று கோஷமிட்டுக் கொண்டே, மரத்தின் உச்சியில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். இதுகுறித்து தகவலறிந்ததுமே, வருவாய்த்துறையினர், போலீஸார், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் விரைந்து வந்தனர்.. பனைமரத்தின் மீது உட்கார்ந்திருந்த ராமச்சந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்..

உரிமைத்தொகை: விரைவில் நிவாரண தொகையை கொடுப்பதாகவும் உறுதி தந்தனர். ஆனால் நிவாரணம் கொடுத்தால் மட்டுமே, பனைமரத்தை விட்டு கீழே இறங்குவேன் என்று ராமச்சந்திரன் கறாராக சொல்லிவிட்டார்.. நீண்ட நேரம் போலீசார் பேசியும்கூட, அவர் கீழே இறங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தினார்.. பிறகு, ஒருவழியாக அவரை பனை மரத்திலிருந்து கீழே இறக்கினார்கள்.. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு அங்கு ஏற்பட்டுவிட்டது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *