வேர்க்கடலை கொழுக்கட்டை

தேவையானவை:

பச்சரிசி மாவு – 1 கப்,
வறுத்த வேர்க்கடலை – ½ கப்,
பொடித்த வெல்லம் – 1 கப்,
ஏலத்தூள் – சிட்டிகை.

செய்முறை:

வேர்க்கடலை, வெல்லம் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, ஏலத்தூள் ேசர்த்துக் கலக்கி உருட்டினால் பூர்ணம் ரெடி. கொழுக்கட்டை மாவு கிளறி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்து அதனுள் பூரணம் வைத்து கொழுக்கட்டை வடிவில் செய்து இட்லிதட்டில் வைத்து 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். வேர்க்கடலை சத்து மிகுந்தது

ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *