`வெறும் அணை மட்டுமல்ல, தமிழகத்தை வாழ வைத்த பண்பாட்டு அடையாளம்!’ – 128 ஆண்டுகளைக் கடந்த பெரியார் அணை

1895-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி, அன்றைய மெட்ராஸ் கவர்னர் வென்லாக் திறந்து வைத்தார். திருமணமான பெண், பிறந்தகத்துக்கு வரும் குதூகலத்துடன் பெரியாறு மாமதுரைக்கு வந்த நாள் அது. பெரியாறு நதியின் நீர் சென்று சேரவேண்டிய கடைசி இடமான மேலூர் புளிப்பட்டிக்கு நதிநீர் சென்று சேர்வதற்கான வாய்க்கால்களின் வேலை 1895க்குள் நிறைவடையவில்லை. மீதமிருந்த வேலைகள் 1900 வரை நடந்தன.

பிரிட்டிஷ் ஆவணங்களின் மூலம் அணை திறக்கப்பட்ட செய்தியை அறிந்துகொள்வதைப் போலவே, அந்தோணி முத்துப்பிள்ளை எழுதிய சந்தமார் சிந்துக் கவிதைகள் நூலும் அணை திறக்கப்பட்ட நாளைப் பற்றிச் சொல்கிறது. 1912-ம் ஆண்டு, கம்பம் ஆங்கூர் ராவுத்தர் என்ற கான்ட்ராக்டர் இறந்த சேதியைக் கேள்விப்படுகிறார் பிள்ளை. இறப்புச் செய்தி கேட்டு, கையறு நிலையில் பாடப்படும் சரம கவிதை எனும் இலக்கிய வடிவத்தில் இக்கவிதையை வடிக்கிறார்.

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை

“ஆயிரத் தெண்ணூற்றரிய தொண்ணூற் றைந்தாண்டின்

மேயஅக்டோபர் விளங்குபத்தாந் தேதிதனில்

பெரியாற்றினைத் திறக்கப் பிரிட்டீசாரான

அரிய கவர்னர்துரை யங்கு வருகிறதால்

தக்க படி மகிமை தான்செய்ய வேண்டுமென்று

சர்க்காரி லுத்தரவு தந்த படியாலே

மலைவாழ் குமுளியதை வாசமிகு பொன்னகர் போல்

துலங்கும் படியாகச் சோடித் தலங்கரித்துப்” எனச் செல்கிறது பாடல்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *