வென்னிலா கேக்

தேவையான பொருட்கள்:

மைதா – 1 1/2 கப்
சர்க்கரை – 3/4 கப்
பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
தயிர் – 1/2 கப்
பால் – 1/2 கப்
எண்ணெய் – 1/2 கப்
வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும்.பின் அதில் ஸ்டேண்ட் வைத்து, குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட்டை நீக்கிவிட்டு, குக்கரை மூடி விசில் போடாமல் 10 நிமிடம் சூடேற்ற வேண்டும். அதற்குள் கேக் மாவை தயாரித்துக் கொள்ள வேண்டும்.அதற்கு கேக் பேன்/பேக்கிங் ட்ரேயை எடுத்து, அதில் சிறிது வெண்ணெய் தடவி, மேலே பார்ச்மெண்ட் பேப்பரை விரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பௌலில் மைதா மற்றும் சர்க்கரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின், அதில் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, எண்ணெய், வென்னிலா எசன்ஸ், பால், தயிர் ஊற்றி ஸ்படுலா பயன்படுத்தி கட்டிகளின்றி நன்கு கிளறி விட வேண்டும்.அடுத்து கிளறி வைத்துள்ள மாவை கேக் ட்ரேயில் ஊற்றி, குக்கரைத் திறந்து, அதனுள் கேக் ட்ரேயை வைத்து, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 50-55 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.கேக் வெந்துவிட்டதா என்பதை ஒரு டூத் பிக் குச்சியைக் கொண்டு குத்தி பார்க்க வேண்டும். குச்சியில் மாவு ஒட்டாவிட்டால், கேக் தயார் என்று அர்த்தம். அதன் பின் ஒரு தட்டில், இந்த கேக் ட்ரேயை கவிழ்த்து போட்டு, துண்டுகளாக்கினால், வென்னிலா கேக் தயார்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *