ஓடிஐ கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி தனது 50-வது சதத்தை அடித்து சாதனை படைத்தார்.
ஓடிஐ கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்களை அடித்த பெருமையை சச்சின் டெண்டுல்கர் கொண்டிருந்தார். இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில், விராட் தனது 50-வது சதத்தை அடித்தார். 50-வது சதத்தை அடித்தது மட்டுமட்டுல்லாமல் சச்சினின் சாதனையையும் முறியடித்து இருக்கிறார்.

ரசிகர்கள் பலரும் விராட் கோலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், கோலியின் மனைவி, நடிகை அனுஷ்கா ஷர்மா விராட்டின் சாதனையைப் பாராட்டி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவு இட்டிருக்கிறார்.
அதில், `கடவுள் சிறந்த ஸ்கிரிப்ட் ரைட்டர். உங்கள் (விராட்) அன்பால் என்னை ஆசீர்வதித்ததுக்கு அவருக்கு மிகுந்த நன்றி. வலிமையாக வளர்ந்து நீங்கள் விரும்புவதை அடைவதைப் பார்க்க வைப்பதற்கும், உங்களது விளையாட்டில் எப்போதும் நேர்மையாக இருப்பதைப் பார்க்க வைப்பதற்கும் கடவுளுக்கு முற்றிலும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நீங்கள் உண்மையிலேயே ஒரு தெய்வ குழந்தை’’ என்று பதிவிட்டுள்ளார்.

நம்பிக்கை நட்சத்திரமாக உயரப் பறக்கும் விராட் கோலிக்கு வாழ்த்துகள்!