வாழ்நாள் முழுவதும் மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் கருணாநிதி – சோனியா காந்தி புகழாரம்!

தி.மு.க மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (அக்.14) மாலை நடைபெற்றது. முன்னாள முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற இந்த மகளிர் உரிமை மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, “இந்த மகளிர் உரிமை மாநாட்டிற்கு அழைத்த முதலமைச்சருக்கு நன்றி. வாழ்க்கை முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உழைத்தவர் கலைஞர். அரசியல் தலைவர், கவிஞர், பத்திகையாளர், எழுத்தாளர் என பல்வேறு சிறப்புகளை கொண்டவர் கலைஞர். இந்தியாவின் தவப் புதல்வர்களின் ஒருவராக அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. வாழ்நாள் முழுவதும் மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்.

ஒரு பெண்ணிற்கு கல்வி கற்றுக்கொடுத்தால் குடும்பத்திற்கே கல்வி கற்றுக் கொடுத்ததாகும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று நிறைவேறி இருப்பதற்கு காரணமாக இருந்தவர் ராஜீவ் காந்திதான். அவர் காட்டிய பாதையில் இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இயங்கும் திமுக அரசின் முன்னெடுப்புகளால் தமிழ்நாட்டை இந்தியாவே புகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு மகளிருக்கான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தாய் – சேய் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைவாக உள்ளது. ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆட்சியில் தான் காவல் துறையில் பெண்கள் என்ற உரிமையை கொண்டு வந்தார். தற்போது இருக்கும் காவல்துறையில் 4-ல் ஒரு பங்கு காவல்துறையில் பெண்களாக இருப்பது பெருமைக்குரியது.

இந்தியா கூட்டமைப்பு பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றிய தீரும். அனைவரும் சேர்ந்து போராடுவோம் நாம் அனைவரும் இணைந்து நிச்சயமாக இதனை சாதிப்போம்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்தக் கோருகிறோம். இந்தியப் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை இனி வீணடிக்க நேரமில்லை. நாளுக்கு நாள் நமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நமது சகிப்புத்தன்மையை கொச்சைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *