வரகரிசி கஞ்சி

தேவையானவை:

வரகரிசி – கால் கப்,
ஓமம் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
தண்ணீர் – அரை கப்,
மோர் – ஒரு கப்.

செய்முறை:

வரகரிசியை கல் பொறுக்கி சுத்தம் செய்து, ஓமம், தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவும். 2 விசில் வைத்தால் வெந்துவிடும். ஆறியதும் மோர், உப்பு சேர்த்து பருகவும். அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கு, ஜீரணம் ஆவதற்கு உதவும் இந்தக் கஞ்சி. மஞ்சள்காமாலை போன்ற நோய் தாக்கியவர்களுக்கும் பசியே எடுக்காதவகளுக்கும் தாராளமாகக் கொடுக்கலாம்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *