ரூ. 58,100 வரை சம்பளம்… 8ம் வகுப்பு பாஸ் போதும்.. அரசு அலுவலகத்தில் நிரந்தர வேலை

திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் நிலையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவியின் பெயர் அலுவலக உதவியாளர்
மொத்த காலியிடங்கள் 11
ஊதியம் ரூ. 15700 – 58,100 என்ற ஊதிய அட்டவணையில் அரசு நிர்ணயம் செய்யும் பிற படிகளுடன்
வயது வரம்பு இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2023 அன்று 32-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.  பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் இரண்டாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்
கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பம் வந்த சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2023 மாலை 5.45 மணி வரை
இதர தகுதிகள் மிதிவண்டி மற்றும் இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

நிபந்தனைகள் : 

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச் சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

3. விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

4. சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10-4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

5. தகுதியில்லாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

6. காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

7. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு

8. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவஞ்சல் மூலமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), ஊரக வளர்ச்சி அலகு, மூன்றாவது தளம்(E-பிளாக்) மாவட்ட ஆட்சியரகம் திருப்பத்தூர்-635601 என்ற முகவரிக்கு 31.10.2023 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். நேரில் கொண்டு வரப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறிந்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான https://www.tirupathur.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *