ரூ.3000 கோடியில் திண்டுக்கல் பொள்ளாச்சி நான்கு வழி பைபாஸ் சாலை – விரைவில் திறப்புவிழா!

பொள்ளாச்சி ஆசியாவிலேயே மிகப்பெரிய வெல்லம் சந்தைகளில் ஒன்றாகவும், தென்னிந்தியாவின் மிகப்பெரிய கால்நடை சந்தையாகவும் உள்ளது. நாளுக்கு நாள் பொள்ளாச்சி செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. ‘பாரத் மாலா பிரயோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3,649 செலவில், பொள்ளாச்சி – திண்டுக்கல் இடையே நான்கு வழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன!

பொள்ளாச்சி – அழகு மட்டுமல்ல, உற்பத்தியும் ஜாஸ்தி

பொள்ளாச்சி ஆசியாவிலேயே மிகப்பெரிய வெல்லம் சந்தைகளில் ஒன்றாகவும், தென்னிந்தியாவின் மிகப்பெரிய கால்நடை சந்தையாகவும் உள்ளது. குறிப்பாக தென்னை நார் பொருட்கள், ஜவுளி, தேயிலை, தேங்காய் ஆகியவை உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் யாவும் கன்டெய்னர் லாரிகள் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்துக்குச் அனுப்பப்படுகின்றன.

dindigulpollachifourlanebypassroad

நெரிசலுடன் காணப்படும் பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகமாகிக் கொண்டே வருகிறது. பொள்ளாச்சி வழியாக கேரள மாநில பகுதிக்கும் அதிகளவு வாகனங்கள் சென்று வருவதால் பொள்ளாச்சி நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. முக்கிய ரோடு வழியாக நகரில் வந்து செல்லும் வாகனங்களால், வருங்காலங்களில் வாகன போக்குவரத்து அதிகரிப்பதுடன், சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

ரூ.3650 கோடி செலவில் புறவழிச்சாலை

மத்திய அரசின் ‘பாரத் மாலா பிரயோஜனா’ கீழ் இத்திட்டம் 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதைதொடர்ந்து, பொள்ளாச்சி கோவை ரோடு ஆச்சிப்பட்டியிலிருந்து திண்டுக்கல் வரையிலும் சுமார் 165 கிலோ மீட்டர் தூரத்தில், தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, சுமார் ரூ.3650 கோடி பட்ஜெட் போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது.

75 சதவீதம் பணி நிறைவு

இடைவிடாத மழை மற்றும் பொதுத் தேர்தல்கள் ஆகியவை திட்டத்தை குறித்த நேரத்தில் முடிப்பதில் தாமதத்திற்கு காரணம், நிலம் கையகப்படுத்துதல் போன்ற காரணங்களால் சாலை அமைக்கும் பனி தாமதமானது. திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வரையிலும் சுமார் 165 கிலோ மீட்டர் தூரத்துக்கு, வெவ்வேறு இடங்களில். இடத்திற்கு தகுந்தார்போல் நான்கு மற்றும் 6 வழியாக புறவழிச்சாலையாக அமைகிறது. தற்போது திண்டுக்கல்லிலிருந்து மடத்துக்குளம் அருகே வரையிலும் பெரும்பாலான பணி நிறைவடைந்துள்ளது. இதுவரை சுமார் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி முதல் மடத்துக்குளம் வரையில், 50.07 கி.மீ., துாரம், மடத்துக்குளம் முதல் ஒட்டன்சத்திரம் வரை 45.38 கி.மீ., துாரம், ஒட்டன்சத்திரம் முதல், காமலாபுரம் வரை, 36.51 கி.மீ., துாரம் என, 131.96 கி.மீ., தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு பணி நிமிர்த்தமாக தென்மாவட்டங்களுக்கு வெளியூர் செல்பவர்களுக்கு இந்த புறவழிச்சலை மிகவும் உதவியாக இருக்கும் என பொள்ளாச்சி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஓராண்டுக்குள் திறப்பு விழா

இத்திட்டத்தின் கீழ், பழநி சண்முகநதி, அமராவதி ஆறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலங்கள், இரண்டு ரயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் கட்டுமான பணிகள், பாலங்களுக்கு இரு புறமும் இணைப்பு ரோடுகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. அதே போல ஆங்காங்கே பேருந்து நிறுத்தங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இன்னும் ஓராண்டுக்குள் இந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *