ராகு கேது பெயர்ச்சி பலன்: குருவாக செயல்படும் ராகு.. புதனாக செயல்படும் கேது.. யாருக்கு ராஜயோகம்

சென்னை: 2024ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டில் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். மீன ராசியில் உள்ள ராகுவும் கன்னி ராசியில் உள்ள கேதுவும் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகின்றனர்.

ராகு கேது பெயர்ச்சி:

நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. கால புருஷ தத்துவதத்திற்கு 12வது வீடு மோட்ச ஸ்தானம் அயன சயன போக ஸ்தானம், கால புருஷ தத்துவத்திற்கு ஏழாம் வீடு களத்திர ஸ்தானம் இந்த இடத்தில் அமர்ந்துள்ள ராகுவும் கேதுவும் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகின்றனர். பொதுவாகவே ராகு கேது கிரகங்கள் இருக்கும் இடத்துக்கேற்ப அந்த வீட்டின் அதிபதியைப் போல் பலன் தருவார். ராகு குரு பகவானைப் போலவும் கேது பகவான் புதன் பகவானைப் போலவும் பலன்களை தரப்போகின்றனர். சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தையும் ராகுவும் கேதுவும் கொடுக்கப்போகின்றனர்.

மேஷம்:

ராகு பகவான் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த இருந்த உடல் உபாதைகள் நீங்கும். ஆறாம் வீட்டில் உள்ள கேதுவும் உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார். கேதுவிற்கு குரு பார்வை கிடைப்பதால் நிறைய பணவரவு வரும். அபரிமிதாக சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பண வருமானத்தை ராகுவும் கேதுவும் அள்ளி கொடுப்பார்கள் கடன் பிரச்னைகள் குறையும். பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். ஆன்மீக யாத்திரைகள் புதிய அனுபவங்களை கொடுக்கும். இந்த ஆண்டு புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள் செவ்வாய் கிழமைகளில் விநாயகரை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

சிம்மம்:

ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளனர். குரு பகவானைப் போல செயல்படும் ராகு பகவான் வருமானத்தை அள்ளித்தரப்போகிறார். திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது. எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குடும்ப பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அநாவசிய பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

துலாம்:

ராகு பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் அமர்ந்துள்ளார். ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகு உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். ராகு வருமானத்தை பணத்தை அள்ளிக்கொடுத்தாலும் யாருக்கும் நீங்கள் கடன் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். விரைய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத வகையில் வருமானம் வரும். நல்ல வேலையும் பதவி உயர்வு கிடைக்கும்.

கும்பம்:

ராகு கேது கிரகங்கள் நல்ல வளர்ச்சியை கொடுக்கும் உங்கள் ராசிக்கு ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் – கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகின்றனர். பணவரவு பொருளாதார வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவும் அதிகரிக்கும். கேது உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். அஷ்டமத்தில் உள்ள கேது பகவானுக்கு குரு பகவானின் பார்வை கிடைக்கப்போகிறது. எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். கடன் கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

மீனம்:

ஜென்ம ராகு களத்திர ஸ்தான கேது வெற்றிகளை தரப்போகிறார். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பணம் விசயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு சீராகும். ஏழாம் இடத்தில் அமர்ந்து உள்ள கேதுவினால் சத்ரு நாசம் ஏற்படும். எதிரிகள் காணாமல் போவார்கள். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *