மோடியை பார்த்து கற்று கொள்ளுங்க.. எப்படி நடந்து கிட்டாரு பாருங்க.. பாக்.வீரர் சோயிப் அக்தர் பாராட்டு

லாகூர் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியா பறி கொடுத்தது.

இந்த தோல்வியிலிருந்து இந்திய அணி ரசிகர்கள் இன்னும் மீளாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிரிக்கெட் வீரர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிறது.

இது பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. பலர் வீரர்களை சந்திக்கும் போது கேமராக்கள் அவசியமா என்று கேள்வி எழுப்பினர். மேலும் சிலர் ஏற்கனவே வீரர்கள் சோகத்தில் இருக்கும் போது பிரதமர் மோடி ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றது வீரர்களுடைய பிரைவசியை பாதித்திருக்கும் என்றும் அந்த வீடியோவில் ரோகித் சர்மா, விராட் கோலி எல்லாம் தர்ம சங்கடத்திலிருந்து முகத்தில் தெரிந்ததாகவும் விமர்சித்து இருந்தார்கள்.

மேலும் இந்த வீடியோவை வைத்து பல மீம்ஸ்களும் உலா வந்தன. இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த செயலுக்கு பாகிஸ்தானில் இருந்து பாராட்டுக்கள் வந்திருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர், உங்கள் பிரதமர் ரசிகர்களுக்கு ஒரு நல்ல மெசேஜை கொடுத்திருக்கிறார். தோல்வியாக இருந்தாலும் வெற்றியாக இருந்தாலும் நாங்கள் வீரர்களுடன் இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இது உண்மையிலேயே மிகப்பெரிய பாராட்டும் விஷயமாகும். பிரதமர் இவ்வாறு செய்வதன் மூலம் ஒட்டுமொத்த நாடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின் இருப்பதாகவும் பாராட்டு தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் ஒரு வீரர்களுக்கு உலகக்கோப்பை தோல்வி என்பது மிகப்பெரிய உணர்ச்சி வச அடையும் தருணமாக இருக்கும்.

ஆனால் பிரதமர் மோடி வீரர்களை தன்னுடைய குழந்தைகள் போல் தோள் மீது கை போட்டு அவர்களுடைய ஒத்வேகத்தை உயர்த்தினார். நீங்கள் இந்த தொடர் மூலம் சிறப்பாக விளையாடியிருக்கிறீர்கள் என்று பாராட்டிருக்கிறார். இது உண்மையிலேயே ஒரு பிரதமருக்கு மிகப்பெரிய சிறந்த செயற்பாடாக நான் பார்க்கிறேன் என்று சோயிப் அக்தர் பாராட்டுகிறார்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *