முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா-தென் ஆப்ரிக்கா மோதல்.! பிற்பகல் 1.30க்கு தொடக்கம்

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா – இந்தியா இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஜோகன்னஸ்பர்க் நகரில் இன்று நடைபெறுகிறது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தலா 3 ஆட்டங்களை கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையலான இந்திய அணி டி20தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்து கோப்பையை பகிர்ந்து கொண்டது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. 2வது போட்டி நாளை மறுநாள் எபேஹாவிலும், 3வது போட்டி டிச.21ல் பார்ல் நகரிலும் நடைபெறும். ஒருநாள் தொடரில் இந்திய அணி விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்குகிறது.

இத்தொடரில் சூரியகுமார், கில், ஜடேஜா, ஜெய்ஸ்வால், சிராஜ், ஜிதேஷ், இஷான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தீபக் சாஹர் சொந்த காரணங்களுக்காகவும், முகமது சமி கணுக்கால் காயத்தாலும் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர். முதல் போட்டியில் மட்டுமே விளையாட உள்ள கில், அதன் பிறகு டெஸ்ட் தொடருக்கு தயாராக உள்ளார். தென் ஆப்ரிக்க ஒருநாள் அணியில் பெரிய மாற்றவில்லை. ஒருநாள் தொடரிலும் மார்க்ரம் கேப்டனாக செயல்பட உள்ளார். இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களமிறங்குவதால், ஆட்டம் சுவாரசியமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *