மீல் மேக்கர் பட்டாணி வெள்ளை குருமா

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் – 3/4-1 கப்
பச்சை பட்டாணி – 1/2 கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

தாளிப்பதற்கு…

கிராம்பு – 4-5
பட்டை – 2 இன்ச்
பிரியாணி இலை – 1
அன்னாசிப்பூ – சிறிது
பச்சை ஏலக்காய் – 1
கல்பாசி – 1 சிறிய துண்டு

வதக்கி அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 6 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 7-8
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 4-5 பல்
சோம்பு – 1.5 டீஸ்பூன்
கசகசா – 1/2 டீஸ்பூன்
முந்திரி – 5-6
பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து, மீல் மேக்கரை போட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். மீல் மேக்கர் நன்கு உப்பி பெரிதானதும், நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, எஞ்சிய நீரை பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், சோம்பு, கசகசா சேர்த்து வதக்கி, துருவிய தேங்காய், முந்திரி, பொட்டுக்கடலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.பின்பு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.பின் பச்சை பட்டாணியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். அதன் பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, 1 கப் நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து, 5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து மீல் மேக்கரை சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறினால், சுவையான மீல் மேக்கர் பட்டாணி வெள்ளை குருமா தயார்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *