மீட்கப்பட்ட 2 பேரின் உடல்! வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் விபத்து ஏற்பட்டது எப்படி

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது, அந்த வகையில் சென்னை வேளச்சேரி 5 பர்லாங் சாலையில் தனியார் கேஸ் பங்க் அருகே தனியார் நிறுவனம் ஒன்று ஏழு மாடி கட்டிடம் கட்டுவதற்காக சுமார் 50 அடி பள்ளம் தோண்டப்பட்டு பேஸ்மெண்ட் போடப்பட்டது. இந்தநிலையில் அந்த 50 அடி பள்ளத்தில் மண் சரி ஏற்பட்டு கேஸ் நிலைய அலுவலக கட்டிடம் பள்ளத்தில் விழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் அங்கு இருந்த எட்டு பேர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் 50 அடி பள்ளத்தில் சிக்கியிருந்த எட்டு பேரில் ஆறு பேரை பத்திரமாக மீட்டு முதல் உதவி அளித்து சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதில் இரண்டு பேரை மீட்க முடியாமல் போனது.

தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக அந்த 50 அடி பள்ளம் முழுவதும் மழை நீர் தேங்கி மூழ்கியதால் அவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு எல்என்டி,தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், என்எல்சி உள்ளிட்டவர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் பள்ளத்தில் சிக்கிய இருவரில் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாலை 5:00 மணி அளவில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்படை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.  கண்டெடுக்கப்பட்ட உடல் சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த நரேஷ் என்பதும் அவர் அந்த தனியார் கேஸ் பங்கில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

பள்ளத்தில் சிக்கி உள்ள மற்றொருவரின் உடலை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மோப்பநாய் உதவியுடன் மற்றொரு இருவரின் உடலை தேடி வந்த நிலையில் தற்போது ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு அவரது உடலை மீட்டு மேலே கொண்டு சென்றுள்ளனர். மேலும் அவரது உடலை பார்த்து அங்கிருந்து அவரது உறவினர்கள் கதறி அழுது வருகின்றனர். அந்த உடல் கட்டிடம் மேற்பார்வையாளர் ஜெயசீலன் உடல் தான் என உறுதி செய்து, அவரது உறவினர்கள் கதறி அழுந்து வருகின்றனர்.  இதையடுத்த அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர், இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

மேலும் அந்தப் பள்ளத்தில் விழுந்த கண்டனர் ஒன்றில் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக விபத்து நடந்த அன்று தகவல்கள் வெளியாகியது. இதனால் தற்போது முழு அளவில் தண்ணீர் வெளியேற்றியதால் அந்த கண்டனயர் உள்ளே சென்று அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர், அப்போது அதில் யாரும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் அந்த 50 அடி பள்ளத்தில் மண் சரிவில் வேறு யாராவது சிக்கி இருக்கிறார்களா என்ற கோணத்தில் மீட்பு படையினர் தீவிரமாக கண்காணித்த வருகின்றனர்.  இந்த நிலையில் முன்னதாக அங்கு ஆய்வு மேற்கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இது குறித்து கூறுகையில், விபத்துக்குள்ளான பள்கம் சுமார் 50 அடி பள்ளம் அது மட்டும் இல்லாமல் அந்த பகுதியை சுற்றிலும் கன மழை காரணமாக அதிக அளவில் மழை நீர் தேங்கியது. சுமார் 275 மோட்டார்கள் மூலம் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டு அந்த பள்ளத்தில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

மேலும் தொடர்ந்து அந்த 50 அடி பள்ளத்தில் மண் சரி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது, எனவே பாதுகாப்புடன் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தனியார் நிறுவனம் மிகப்பெரிய ஏழு மாடி கட்டிடம் கட்டுவதற்காக அந்த 50 அடி பள்ளம் தோண்டி உள்ளனர். மேலும் அதில் போடப்பட்ட பேஸ்மென்ட் நல்ல உறுதியுடன் கட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது.  மேலும் அந்த அலுவலக கட்டிடத்தின் கண்டனர் ஒன்று உள்ளே விழுந்துள்ளது போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கட்டிடம் கட்டுவதற்கு யார் யாரிடம் அனுமதி பெற்றுள்ளார்கள் என்ன மாதிரியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தலாம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம். இந்த யோகாரம் குறித்து தினமும் முதல்வர் தன்னிடம் விவரங்களை கேட்டு அறிந்து வந்தார்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான நிவாரணம் வழங்கப்படும், தீயணைப்புத்துறை தேசிய பேரிடர் மீட்பு பணி எல் என் டி மற்றும் போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது விசாரணை நடைபெற்று வருகிறது அதன் பின்பு வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *