மாற்றுத்திறனாளி கிரிக்கெட் இந்திய அணியில் தஞ்சை வீரர் தேர்வு

தஞ்சாவூர்: மாற்றுத்திறனாளிகளுக்கான திவ்யாங் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் தஞ்சை வீரர் பாலசுந்தர் இடம் பிடித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வில்வராயன்பட்டியை சேர்ந்தவர் பாலசுந்தர் (27). மாற்றுதிறனாளியான இவர், 12ம் வகுப்பு வரை அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்தார். பள்ளி விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட தொடங்கினார். தந்தை இறந்து விட்டதால் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு சென்றவாறு பி.இ.சிவில் படித்தார். டிஎன்சிஏ சார்பில் நடந்த தகுதி போட்டியில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து தமிழ்நாடு அணிக்கு தேர்வானார். தற்போது தேசிய அணிக்கும் தேர்வாகி அசத்தியுள்ளார். திவ்யாங் கன்ட்ரோல் போர்டு ஆப் இந்தியா சார்பில் ஆக்ராவில் நடைபெறும் திவ்யாங் கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிராக நடக்க உள்ள போட்டிகளில் பாலசுந்தர் களமிறங்க உள்ளார்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *