மாணவர் சேர்க்கை விவகாரம்; கேந்திர வித்யாலயா நிர்வாகத்துக்கு `குட்டு’வைத்த நீதிமன்றம் – என்ன நடந்தது?

ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதியை தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடினால் மட்டும் போதாது எனவும், பெண் குழந்தைகளின் உரிமைகளைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோரை குற்றம் சொல்வதா… இல்லை, விதிமுறைகளை குற்றம் சொல்வதா எனத் தெரியவில்லை எனவும் கூறினார்.

கேந்திரிய வித்யாலயா
கேந்திரிய வித்யாலயா

இது போன்ற விதிகளால் நாடு முழுவதும் பல மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால், அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிராக நீதிமன்றம் செயல்பட்டதுபோல ஆகிவிடும் எனவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, தேசத்தின் சொத்தான மாணவர்களைக் காப்பாற்ற வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என தெரிவித்த நீதிபதி,  மாணவிக்கு எட்டாம் வகுப்புக்கான சேர்க்கை அளிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *