‘மாட்டிறைச்சி சாப்பிடுவியா’ மாணவியை துன்புறுத்திய ஆசிரியை? – கோவையில் அதிர்ச்சி!

Coimbatore Latest News: கோவை துடியலூர் அசோகபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவி ஒருவர், கோவை மணிகுண்டு பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பெற்றோருடன் வந்து அப்பள்ளியின் ஆசிரியர் அபிநயா மீதும் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மீதும் புகார் மனு அளித்தார்.

‘மாட்டுக்கறி சாப்பிட்டு திமிருடன் பேசுகிறாயா’

அந்த மனுவில் ஆசிரியர் அபிநயா, மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் இது குறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டதாகவும் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டது குறித்து ஆசிரியர் அபிநயா அந்த மாணவியிடம் சக மாணவர்கள் முன்பு வகுப்பறையில், ‘உனது பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள்?’ என கேட்டதாகவும் அதற்கு அந்த மாணவி, மாட்டு இறைச்சி கடை வைத்துள்ளதாக கூறியதாகவும் ‘மாட்டுக்கறி சாப்பிட்டு திமிருடன் பேசுகிறாயா’ என்று கூறியதுடன் ஆத்திரமடைந்து மாணவியின் கன்னத்தில் அடித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

காலணியை துடைக்க வைத்து துன்புறுத்தல்

இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியிடம் முறையிட்ட போது அவரும் மிரட்டுகிறீர்களா என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளனர். பின்னர் மாட்டுக்கறி சாப்பிடுவாயா என்று சக மாணவிகள் முன்பு கேட்டு காலணியை துடைக்க வைத்து துன்புறுத்தியதாகவும் இவர்களால் மாணவியின் படிப்புக்கு அச்சம் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த பேட்டியில், நடந்த இந்த சம்பவம் குறித்து கோவை துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும் காவல்துறையினர் விசாரித்து அறிவுரை வழங்கியுள்ள நிலையில் பள்ளிக்கு செல்லும்போது மிரட்டும் சம்பவம் மீண்டும் நடைபெற்றதால் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக கூறினர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் பெற்றோர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவதாக தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி விளக்கம்

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *