‛‛மன்னித்து விடுங்கள்’’.. மபி மாஜி முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நீதிபதிக்கு பரபர கடிதம்! பின்னணி

போபால்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் பதவியை எதிர்பார்த்த சிவ்ராஜ் சவுகானுக்கு பாஜக மேலிடம் மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. இத்தகைய சூழலில் தான் அவர் திருட்டில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்களுக்காக மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மன்னித்து விடுங்கள் எனக்கூறி பரபரப்பாக கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்துக்கு கடந்த மாதம் 17 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. கடந்த 3ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இந்த தேர்தலில் பாஜக 163 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது. மாறாக காங்கிரஸ் கட்சி 66 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து மத்திய பிரதேசத்தின் முதல்வராக மோனக் யாதவ் பொறுப்பேற்றார். அதோடு 17 ஆண்டுகளாக முதல்வராக செயல்பட்ட சிவ்ராஜ் சவுகான் ஒதுக்கப்பட்டுள்ளார்.

இத்தகயை சூழலில் தான் முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி மாலிமத்துக்கு மன்னிப்பு வழங்ககோரி பரப்பான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்களுக்காக அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். அதாவது குவாலியர் ஏபிவிபி (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) அமைப்பின் செயலாளராக இருப்பவர் ஹிமான்சு ஸ்ரோட்ரியா (வயது 22), துணை செயலாளராக இருப்பவர் சுக்ரித் சர்மா (24). இவர்கள் 2 பேரும் கடந்த 11ம் தேதி கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 11ம் தேதி ரயில் நிலையத்தில் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் ரஞ்சித் சிங் (வயது 68) உயிருக்கு போராடினர். மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் குவாலியர் ரயில் நிலையத்தில் துடிதுடித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் ரஞ்சித் சிங்கை மீட்டு அவருக்கு உதவி செய்யும் வகையில் அங்கிருந்த நீதிபதி ஒருவரின் காரை எடுத்து மருத்துவமனைக்கு சென்றனர்.

இந்த வேளையில் அவர்கள் நீதிபதியின் கார் சாவியை டிரைவரிடம் இருந்து பறித்து காரை ஓட்டி சென்றனர். இதுகுறித்த புகாரில் ஹிமான்சு ஸ்ரோட்ரியா, சுக்ரித் சர்மா கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2 பேரும் குவாலியர் சிறப்பு நீதிமன்றத்தில் 2 பேரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். உதவி செய்வதாக இருந்தாலும் கூட ஒருவரிடம் பணிவாக தான் காரை கேட்க வேண்டுமே தவிர வலுக்கட்டாயமாக சாவியை பிடுங்கி செல்ல கூடாது. வலுக்கட்டாயமாக கார் சாவியை பிடுங்கி இருப்பது குற்றம் எனக்கூறி ஜாமீன் வழங்க சிறப்பு நீதிபதி மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தான் முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி மாலிமத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக அவர்கள் காரை எடுத்து சென்றுள்ளனர். மனிதாபிமான அடிப்படையிலும், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இருவரையும் விடுவிக்க வேண்டும். அதோடு அவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *