மதமாற்றம் பண்றீங்களா? கிறிஸ்துமஸ் விழாவில் கட்டைகளுடன் புகுந்த கும்பல்! பாதிரியார் மீதும் தாக்குதல்!

டேஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் போது கட்டாய மதமாற்றம் நடத்தப்படுவதாகக் கூறி மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் பாதிரியார் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயேசு பிரான் அவதரித்த நன்னாளான கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ மக்களிடையே வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேவாலயங்களில் கூட்டுத் திருப்பலி கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் பரிசுகள் உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வது என கிறிஸ்துமஸ் பண்டிகை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வழக்கமான பரபரப்பை எட்டி உள்ளது.

கிறிஸ்துமஸ்..தேவமைந்தனை வரவேற்கும் ஒளிரும் தேவாலயங்கள்..நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை கிறிஸ்துமஸ்..தேவமைந்தனை வரவேற்கும் ஒளிரும் தேவாலயங்கள்..நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை

  கிரிதுமஸ்

கிரிதுமஸ்

அதே நேரத்தில் கிறிஸ்துமஸ் சம்பவத்தை ஒட்டி சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன குறிப்பாக கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூடங்களில் வட மாநிலங்களில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் நேற்று கிறிஸ்துமஸ் தாத்தா வேடமடைந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய ஒருவர் மீது மர்மகும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கட்டாய மதமாற்றம்

கட்டாய மதமாற்றம்

இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் போது கட்டாய மதமாற்றம் நடத்தப்பட்டதாக கூறி மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் பாதிரியார் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள புரோலா கிராமத்தில் வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

தாக்குதல்

தாக்குதல்

அப்போது அங்கு மதமாற்றம் நடத்தப்படுவதாகக் கூறி சுமார் 30 இளைஞர்கள் கொண்ட குழு கட்டைகல், தடிகளுடன் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து அங்கிருந்தவர்களை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. நாங்கல்லாம் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறி அந்த கும்பல் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பிரார்த்தனை

பிரார்த்தனை

டேஹ்ராடூனில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள புரோலா கிராமத்தில் ஹோப் அண்ட் லைஃப் சென்டரில் நண்பகல் வேளையில் பிரார்த்தனையின் போது தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் அதிர்ச்சியூட்டும் விதமாக தாக்குதல் நடத்தியவர்களை விட்டு விட்டு, அங்கிருந்த பாதிரியார் லாசரஸ் கொர்னேலியஸ் மற்றும் அவரது மனைவி சுஷ்மா கொர்னேலியஸ் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பேச்சுவார்த்தையில் புகார் அளிக்கப்படவில்லை என அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

  மதமாற்ற தடை சட்டம்

மதமாற்ற தடை சட்டம்

உத்தராகண்ட் மாநில பாஜக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் மதமாற்றத்துக்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்தது. அந்த மசோதாவுக்கு இன்று ஆளுநரின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மதத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது தேவாலயத்திற்குள் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

மலைவாழ் மக்களான அப்பகுதிவாசிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய நிலையில் மீண்டும் இந்து மதம் திரும்ப வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சில இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்ததாகவும் ஆனால் அவர்கள் உடன்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதை அடுத்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது இந்த கும்பல் தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *