மணப்பெண் அலங்காரம்… தலை முதல் கால்வரை பெஸ்ட் ஆக்ஸசரீஸ்!

முகூர்த்த நாள் நெருங்குது… சங்கீத் ஃபங்க்ஷன், பரிசத் திருவிழா, நலங்கு, முகூர்த்தம், ரிசப்ஷன், தாம்பூலம் இப்படி எல்லா ஃபங்க்ஷனுக்கும் சேலைகள் எடுத்தாச்சு… ஆனா, அதுக்கான நகைகளும் ஆக்ஸசரீஸும் எடுத்துட்டீங்களா?

சேலைகளுக்கு ஏற்ற நகைகளும், மேட்ச்சிங்கான ஆக்ஸசரீஸும் எடுப்பதில்தான் ஒரு மணப்பெண்ணின் மொத்த தோற்றமும் அடங்கி இருக்கிறது.

மணப்பெண்கள் முகூர்த்தம் மற்றும் ரிசப்ஷனில் கட்டப்போகும் சேலைகளுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, அதனுடன் அணியப்போகும் நகைகள் மற்றும் ஆக்ஸசரீஸ்களுக்கும் அவசியம் கொடுக்க வேண்டும்.

மணப் பெண் அலங்காரம்

மணப் பெண் அலங்காரம்

கண்ணைப் பறிக்கும் நகைகள் ஆயிரம் இருந்தாலும், அவை உங்களின் உடலை உறுத்தாமல் இருக்குமா என்று யோசிக்க வேண்டியது அவசியம்.

வழக்கமாக, நம் வீட்டில் நெக்லஸ் எடுப்பதிலிருந்து ஆரம்பிப்போம் அல்லவா… அப்போது, உங்களின் ஜாக்கெட் மற்றும் புடவையின் கழுத்துப் பகுதியை மனதில் வைத்து நகைகளை வாங்குங்கள். புடவையின் கலர், புடவை ஜரிகையின் கலர், புடவை பார்டரின் கலர் மற்றும் அதன் நீளம் என அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

ஹாப்ஃ வொயிட், சந்தனம், மஞ்சள், இளஞ்சிவப்பு, கிளிப் பச்சை போன்ற லைட் கலர் புடவைகளுக்கு வைடூரியம், பவளம், மரகதம் என ரத்தினங்கள் பதித்த நகைகள் எடுப்பாக இருக்கும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *