“பேராபத்து”: ஆப்கன் பெண்களை துரத்தி துரத்தி டார்ச்சர்.. ஆமா, கல்யாணத்

ஆப்கன்: ஆப்கன் பெண்கள் கல்வி கற்க, இன்னொரு அதிர்ச்சி அறிவிப்பை தாலிபன்கள் வெளியிட்டுள்ளனர்.. இதற்கான காரணத்தையும் தாலிபன்கள் விளக்கியுள்ளனர்.. தாலிபன்களின் பெருகிவரும் இந்த அட்டகாசத்தை பார்த்து உலக மக்களே அதிர்ந்து போய் உள்ளனர்.

தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் பள்ளிகள் ஆப்கானில் திறக்கப்படவில்லை.. பல்கலைக் கழக கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி கிடையாது. ஆப்கன் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

திரைச்சீலை உதவியுடன் மாணவர்களை தனியாக பிரித்து உட்கார வேண்டும் என்றும், பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் தான் பாடம் நடத்துபவர் என்றும் தாலிபன்கள் உத்தரவிட்டனர்.

ஆப்கானிஸ்தான்: தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் - தாலிபன் நிலைப்பாடு என்ன?ஆப்கானிஸ்தான்: தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் – தாலிபன் நிலைப்பாடு என்ன?

  சவுக்கடி

சவுக்கடி

அதேபோல, மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் தாலிபான்கள் நிறைவேற்றி வருகின்றனர். பல்கலைக் கழகத்தில் பெண்கள் பணியாற்றும் கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துவிட்டனர்.

  இடைக்கால தடை

இடைக்கால தடை

தற்போது ஒரு கொடுமை நடந்துள்ளது.. ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர்… அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும் என்ற அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. கற்க தாலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

  கொதிப்பு நிலை

கொதிப்பு நிலை

ஏற்கனவே, இப்படி பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தடை விதித்து, அவர்களுக்கு கல்வி அளிக்க மறுத்து வருவதற்கு ஐநா எதிர்ப்பை பதிவு செய்த ஐநா, மீண்டும் இந்த விஷயத்தை கொந்தளித்துள்ளது. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் சொல்லும்போது, ​​ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து கல்வியில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது மிகவும் கவலையளிக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

  கண்ணீர் முடிவு

கண்ணீர் முடிவு

ஆப்கனின் இந்த திடீர் முடிவால், மாணவிகள் கண்ணீருடன் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சில பல்கலைக்கழகங்களில் தாலிபன் அரசின் இந்த முடிவை எதிர்த்து மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  வழிகாட்டுதல்

வழிகாட்டுதல்

இந்நிலையில், தங்கள் தடை உத்தரவுக்கு சர்வதேச அரங்கில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில், தடைக்கான காரணம் குறித்து தாலிபான் விளக்கம் அளித்துள்ளார். அந்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் நிதா முகமது நதி இதை பற்றி சொல்லும்போது, ​​”பல்கலைக்கழகம், கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு, உயர்கல்வி அமைச்சகம் விரிவான வழிகாட்டுதல்களை 14 மாதங்களுக்கு முன்பே வழங்கியிருந்தது… ஆனால், 14 மாதங்கள் கடந்தும்கூட, இந்த வழிகாட்டுதல்களை மாணவிகள் யாரும் பின்பற்றுவதில்லை. டிரஸ் தொடர்பான விதிகளையும் அவர்கள் பின்பற்றுவதில்லை…

  கல்யாணமா?

கல்யாணமா?

முக்கியமாக, கல்வி நிலையங்களுக்கு வரும்போது, ​​ஆண் உறவினரின் துணையுடன் வர வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது.. ஆனால், அந்த விதியையும் பின்பற்றுவதில்லை. ஏதோ கல்யாணத்துக்கு வருவது போல, மாணவிகள் டிரஸ் அணிந்து வருகிறார்கள்… ஹிஜாப் விதிகளை அவர்கள் முறையாக பின்பற்றுவதில்லை… அதுமட்டுமல்ல, பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகள், பெண்களின் கண்ணியம் மற்றும் ஆப்கானிஸ்தானின் கலாசாரத்திற்கு கூட ஒத்துவராதவை… சில படிப்புகள் இஸ்லாமின் அடிப்படைகளை மீறும் விதமாக பயிற்றுவிக்கப்படுகிறது.. தடையை அறிவித்தோம்” என்று விளக்கமளித்துள்ளார்.

விழிபிதுங்கிருச்சு

விழிபிதுங்கிருச்சு

கடந்த 20 வருடங்களாகத்தான் ஆப்கன் பெண்கள், லேசாக தலைநிமிர தொடங்கினர்.. வீட்டை விட்டு வெளியேறி மெல்ல மெல்ல பெண்கள் படிக்க ஆரம்பித்தனர்.. வேலைக்குச் செல்ல துவங்கினர். பெண்களை வைத்து கொண்டிருந்த, உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன, கட்டுப்பாடுகள் அதிகரித்து, மீளா துயரில் ஆழ்த்தி வருகிறது… எங்கே போவது, என்ன செய்வது என்று தெரியாமல் ஆப்கன் பெண்கள் விழிபிதுங்கி கொண்டிருக்கிறார்கள்…!!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *