பெங்களூருவில் இருந்து ஒரு நாள் ட்ரிப் செல்ல ஏற்ற அருமையான இடங்கள் இவை தான்!

பெங்களூருவில் எண்ணற்ற பொழுதுபோக்குகள் நிறைந்து இருந்தாலும், எல்லோருக்கும் வார இறுதியை சரியாக கழிக்க நேரமோ வசதியோ அமைவது இல்லை! ஆனால், அரை நாள் அல்லது ஒரு நாளில் ஒரு குட்டி ட்ரிப் போக வேண்டும் என்று ஐடியா இருந்தால், அதற்கு நிறைய வழிகள் உள்ளன. பெங்களூருவைச் சுற்றி ஒரு சின்ன அவுட்டிங் சென்று வர ஏகப்பட்ட இடங்கள் உள்ளன. அரண்மனைகள் முதல் கோட்டைகள் வரை, இயற்கையான பாறைகள் முதல் மலைகள் வரை, ஏரிகள் முதல் நீர்வீழ்ச்சிகள் வரை, பெங்களூரைச் சுற்றி கிட்டத்தட்ட அனைத்துமே உள்ளன, அந்த சிறந்த இடங்களிலும் மிகச் சிறந்த இடங்களை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்!

nandihills

நந்தி ஹில்ஸ்

பெங்களூரைச் சுற்றி ஒரு நாள் பயணத்திற்கான சிறந்த இடங்களில் முதன்மையானது நந்தி ஹில்ஸ் ஆகும். பெங்களூருக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற வார விடுமுறை இடமாக மட்டுமே இல்லாமல், நந்தி ஹில்ஸ் திப்பு கோட்டையின் மிச்சங்கள் மற்றும் பழங்கால கோவில்களுடன் வரலாற்று ஆர்வலர்களுக்கான இடமாகவும் உள்ளது. அழகான மலைகள் பின்னணியில் சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயத்தைக் காணுவது, நந்தி மலைகளுக்கு இடையே பாராகிளைடிங் செய்வது, செங்குத்தான சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது, மேகங்களுக்கு நடுவே நடந்து செல்வது என உங்களின் சோர்ந்து போன உயிருக்கு ஊட்டம் அளியுங்கள்.

மஞ்சின்பெலே

பெங்களூரில் இருந்து 36 கிமீ தொலைவில் அமைந்துள்ள மஞ்சின்பெலே ஒரு சிறிய நீர் தேக்கமாக பெங்களூரு மக்களிடையே மிகவும் ஃபேமஸ். பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து ஒரு சிறிய ஓய்வு எடுக்க, உயிருக்கு புத்துணர்ச்சி அளிக்க மஞ்சின்பெலே பல சாகச நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. இங்கு நீங்கள் கயாக்கிங், ராப்பல்லிங், ட்ரெக்கிங் மற்றும் ராஃப்டிங் ஆகியவற்றில் நீங்கள் ஈடுபடலாம்.இதில் உங்களுக்கு அவ்வளவு நாட்டம் இல்லையென்றால் உங்களைச் சூழ்ந்திருக்கும் அமைதியான சூழ்நிலையிலும் இயற்கை அழகிலும் திளைப்பதன் மூலம் நீங்கள் உங்களை மகிழ்விக்கலாம்.

ramnagara1

ராமநகரா

நாட்டுப்புற கலைப்பொருட்களைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமுள்ள கலாச்சார ஆர்வலர்கள் அனைவருக்கும், ஜனபத லோகம் ஒரு சிறந்த தேர்வாகும். பல்வேறு கண்காட்சிகள் மூலம் பிராந்திய கலாச்சாரத்தை பாதுகாக்கும் இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால வேட்டை உபகரணங்கள், பாரம்பரிய வீட்டுப் பொருட்கள், துடிப்பான பொம்மலாட்டங்கள்மற்றும் திருவிழாவை மையமாகக் கொண்ட பொருட்கள் ஆகியவற்றை நீங்கள் இங்கே காணலாம்.

ஸ்கந்தகிரி

தெளிவான, விண்மீன்கள் நிறைந்த வானத்தின் கீழ் உறங்குவது, ஸ்டார்கேஸிங் செய்வது அல்லது மலை உச்சியில் இருந்து மகிமையான சூரிய உதயத்தைப் பார்ப்பது உங்களுக்கு பிடிக்குமென்றால் நீங்கள் பெங்களூருவில் இருந்து 61 கிமீ ஸ்கந்தகிரிக்கு தான் செல்ல வேண்டும். ஸ்கந்தகிரியின் உச்சிக்கு ட்ரெக்கிங் என்பது ஒரு பரவசமான அனுபவமாகும், இது இயற்கை அழகின் காரணமாக மட்டுமல்ல, ஒரு காலத்தில் கம்பீரமான திப்பு சுல்தானின் கோட்டைமற்றும் ஒன்றிரண்டு கோவில்களின் இடிபாடுகளையும் காணலாம்.

balmuriandedmuriwaterfalls

பால்முரி மற்றும் எட்முரி நீர்வீழ்ச்சி

இந்த இடம் பெங்களூரு நகரில் இருந்து 130 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, இலக்கை அடைய 2 மணி நேரம் ஆகலாம். ஆனால் அங்கு சென்று அதன் அழகில் நனையும் போது உங்களுக்கே தெரியும், இதற்கு இன்னும் சிரமப்பட்டாலும் தவறில்லை என்று! இந்த அழகிய நீர்வீழ்ச்சிகள் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட செக் டேம் காரணமாக நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்தி, பசுமையால் சூழப்பட்டு பெங்களூருக்கு அருகிலுள்ள சிறந்த ஒரு நாள் சுற்றுலா தலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.நீங்கள் தண்ணீரில் குதூகலமாக விளையாடலாம் மற்றும் பச்சை வயல்களில் நடந்து செல்லலாம்.

கொக்கரே பெல்லூர் பறவைகள் சரணாலயம்

நீங்கள் தீவிர பறவை ஆர்வலராக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக கொக்கரே பெல்லூர் பறவைகள் சரணாலயத்திற்கு செல்ல வேண்டும். பெங்களூருக்கு அருகிலுள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான இந்த சரணாலயத்தில் நீங்கள் பலவிதமான அழகிய மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளைக் காணலாம். ஸ்பாட் பெலிகன்கள், பல வண்ண நாரைகள் மற்றும் கொக்குகள் ஆகியவற்றையும் நீங்கள் கண்டு மகிழலாம்.

sivanasamudrawaterfalls

சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி

பெங்களூரில் ஒரு நாள் விடுமுறைக்கு பார்க்க வேண்டிய மிக அழகிய இடங்களில் ஒன்றான சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி காவேரி நதியால் உருவாக்கப்பட்ட இரண்டு பல அடுக்கு நீர்வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது.ககனசுக்கி மற்றும் பரச்சுக்கி ஆகிய இரண்டு நீர்வீழ்ச்சிகளும் சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளும் ஒன்றுக்கொன்று வெகு தொலைவில் இல்லை என்றாலும், ஒவ்வொன்றிற்கும் 15 கிமீ தொலைவில் தனித்தனியான அழகான பாதைகள் உள்ளன. நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் தற்காலிமாக முகாமிட்டு நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்கலாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *