புழல் சிறையில் தான் தீபாவளியா… டிடிஎப் வாசனுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

TTF Vasan Remand Extended: பிரபல யூ-ட்யூபரான டிடிஎப் வாசன் கடந்த செப்.17ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் நோக்கி தனது விலை உயர்ந்த அதிநவீன இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று வீலிங் சாகசத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் டிடிஎப் வாசன் தனது இரு சக்கர வாகனத்தில் முன் வீல் தூக்கி வீலிங் செய்ய முற்பட்டபோது அவரது இரு சக்கர வாகனமாமது விபத்துக்குள்ளானது. அதில் டிடிஎப் வாசன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

இதனையெடுத்து தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், பிறரது உயிருக்கு ஆபத்தை விளைக்கும் வகையில் சாலையில் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த செப்.19ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனுவானது இது வரை நான்கு முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்று முறை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து கடந்த 45 நாட்களாக நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நீதிமன்ற காவலானது இன்றுடன் முடிவடைகின்ற நிலையில், இன்று மீண்டும் காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1இல் நீதிபதி இனியா கருணாகரன் முன்னிலையில் டிடிஎப் வாசன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து  நான்காவது முறையாக டிடிஎப் வாசனுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார். வரும் நவம்பர் மாதம் 9ஆம் தேதி வரை 11 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

யார் இந்த டிடிஎப் வாசன்?

டிடிஎப் வாசனை பலருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும், தெரியாதவர்களுக்காக இந்த தகவல் கொடுக்கப்படுகிறது. டிடிஎப் வாசன் சமூக வலைத்தளத்தில் பைக் ரேஸ் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானவர். இவருக்கு மிக பெரிய அளவில் சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட தரப்பில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கல்லூரி பருவமுடைய பல இளைஞர்கள் இவர் மீது வெறித்தனமாக பின்பற்றுகின்றனர். இவரை போல பைக் ரேஸ் செய்ய வேண்டும் என நினைத்து பலர் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்த பைக் விபத்திற்கு முன், டிடிஎப் வாசன் வந்த கார் ஒன்று சென்னையில் விபத்தில் சிக்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *