புரோ கபடி லீக்: பெங்கால்-உ.பி.யோத்தா, புனே- டெல்லி மோதல்

புனே: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் தற்போது புனேவில் நடந்துவருகிறது. இதில் நேற்று நடந்த 27வது லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் -நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மோதின.இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா 16-8 என முன்னிலை பெற்றது.2வது பாதியில் பாட்னா சிறப்பாக ஆடி புள்ளிகளை குவித்தது. இதில் அந்த அணி 21, பாட்னா 12 புள்ளி எடுத்தன. கடைசி நொடி வரை பரபரப்பாக நடந்த போட்டியில் 29-28 என ஜெய்ப்பூர் வெற்றி பெற்றது. 5வது போட்டியில் அந்த அணிக்கு இது 2வது வெற்றியாகும்.

பாட்னா 3வது தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் யு மும்பா 46-33 என்ற புள்ளி கணக்கில் தமிழ்தலைவாஸ் அணியை வீழ்த்தியது. தமிழ்தலைவாஸ் 4வது போட்டியில் 2வதுதோல்வியை சந்தித்தது. மும்பா 3வது வெற்றியை பெற்றது. இன்று இரவு 8 மணிக்கு பெங்கால் வாரியர்ஸ்-உ.பி.யோத்தா, இரவு 9 மணிக்கு புனேரி பால்டன்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *