புரோ கபடி லீக்கில் இன்று புனே-பாட்னா மோதல்

சென்னை:12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 40வது லீக் போட்டியில் தபாங் டெல்லி 38-29 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தமிழ்தலைவாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அரியானா முதல் பாதியில் 18-12 என முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் அதிரடியாக புள்ளிகளை குவித்தது. இதில் அந்த அணி 24, தமிழ்தலைவாஸ் 17 புள்ளிகள் எடுத்தன.

முடிவில் 42-29 என அரியானா வெற்றிபெற்றது. அந்த அணிக்கு இது 7வது போட்டியில் 5வது வெற்றியாகும். தமிழ்தலைவாஸ் சொந்த மண்ணில் மோதிய 3 போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது. 7 போட்டியில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் 11வது இடத்தில் உள்ளது. இன்று இரவு 8 மணிக்கு புனேரி பால்டன்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *