புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை எவ்வாறு வழிபட வேண்டும் தெரியுமா?

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவது குறித்து
நெல்லை
யைச் சேர்ந்த பக்தர் நவநீதன் விளக்கி கூறினார். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு
திருநெல்வேலி
மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும் என பக்தர் நவநீதன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் பாவங்கள் நீங்குவதுடன், பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இந்த நாளில் தளிகை அல்லது படையல் இட்டும், மாவிளக்கு போட்டும் பெருமாளை வழிபடுவது வழக்கம்.

புரட்டாசி சனிக்கிழமையன்று எவ்வாறு தளிகையிட்டு, பெருமாளை வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெற முடியும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். பெருமாள் வழிபாட்டிற்குரிய மிக அற்புதமான மாதம், புரட்டாசி மாதம் ஆகும். புரட்டாசி மாதத்திற்கு என்று எத்தனையோ தனிச்சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று புரட்டாசி சனிக்கிழமை விரதம்.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்களும் உண்டு. இன்னும் சிலர் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் விரதம் இருந்து வழிபடுவதும் உண்டு. புரட்டாசி சனிக்கிழமையன்று அனைவரும் விரதம் இருந்து திருமால் வழிபாட்டை மேற்கொண்டால் அளவில்லாத பலன்கள் கிடைக்கும் என சொல்வார்கள். புரட்டாசி சனிக்கிழமைக்கு அப்படி என்ன சிறப்பு என பலருக்கும் தோன்றும். சூரிய பகவான், கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலம் இந்த புரட்டாசி மாதம்.

இந்த மாதத்தில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். மகாவிஷ்ணுவின் அருளை பெறக் கூடிய நாள் என்பதால், இந்த நாளில் விரதம் இருந்தால் மகாலட்சுமியின் அருளும் நமக்கு கிடைக்கும்” என தெரிவித்தார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *