புதுச்சேரியில் விடிய விடிய களைக்கட்டும் புத்தாண்டு கொண்டாட்டாங்கள் – இப்போதே டிக்கெட் புக் செய்யுங்கள்!

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு அழகான கடற்கரை நகரமான புதுச்சேரி நீங்கள் வேறு எங்கும் கண்டிறாத துடிப்பான புத்தாண்டு கொண்டாட்டங்களை வழங்குகிறது. பிரெஞ்சு காலனி ஆதிக்கச் செல்வாக்கு, அழகிய கடற்கரைகள், பல ஊர் மக்கள், கண்கவர் இசை நிகழ்ச்சிகள், பானங்கள் என உங்கள் நண்பர்களோடு புத்தாண்டை வரவேற்க இப்போதே புதுச்சேரியில் நடைபெறும் புத்தாண்டு விருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்! புத்தாண்டு ஈவ் கொண்டாட்டங்களின் போது நீங்கள் புதுச்சேரியின் கலகலப்பான தெருக்களை ஆராயலாம், ருசியான பிரஞ்சு மற்றும் இந்திய உணவு வகைகளை ரசிக்கலாம், புதிய நண்பர்களோடு இரவு முழுக்க நடனமாடி புத்தாண்டை வரவேற்கலாம்!

புத்தாண்டை கோலாகலமாக வரவேற்கும் புதுவை

கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதற்கு முன்னே புதுவை நகரம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிப்பட்டு மின்ன ஆரம்பிக்கிறது. இந்த விழாக்கோலம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மட்டுமே அல்ல, அடுத்த ஒரு வாரத்திலேயே வரவிருக்கும் புத்தாண்டை வரவேற்க தான்! புத்தாண்டு பிறப்பதற்கு குறைந்துது 10 நாட்களுக்கு முன்னரே, புது வருட கொண்டாட்டத்தின் அதிர்வுகள் புதுவையில் கால் பதித்து விடுகிறது. இந்த ஆண்டும் அது போலவே புதுவையில் ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பார்ட்டிகள், பப்கள், நியூ இயர் வாக், கோவில்கள், தேவாலயத்தில் நைட் மாஸ், கடற்கரைகளில் கொண்டாட்டம் என எல்லா வகையான கூட்டத்தினருக்கும் புதுவை ஏதோ ஒன்றை வழங்குகிறது. நீங்கள் இதில் எந்த வகையோ அப்படி உங்கள் கொண்டாட்டத்தை தேர்வு செய்யுங்கள்.

pondicheeey new year celebrations

உலகத்தர பப்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

புதுவையில் இரவு கலாச்சாரம் என்பது மேற்கத்திய நாடுகளைப் போல மெருகேறிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு வார இறுதியும் இங்கு துடிப்பான பார்ட்டிகள் நடைபெறுகின்றன. ஏறக்குறைய புதுவையின் எல்லா முக்கிய வீதிகளிலும் நாம் ஒரு பப்பை கண்டுபிடித்துவிடலாம். வார இறுதிகளிலே பார்ட்டி என்றால், புத்தாண்டு அன்று சொல்லவா வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள புதுவையின் பிரபலமான பப்பில் கலந்துக் கொண்டு புத்தாண்டை கொண்டாடி வரவேற்றிடுங்கள்!

1. சன்பர்ன் ரீலோட் NYE – பாண்டி மரீனா – நுழைவுக்கட்டணம் ரூ.2500 முதல்

2. நியூ இயர் நைட் பார்ட்டி – கிராவிட்டி ரெஸ்டோ பப் – நுழைவுக்கட்டணம் ரூ.2999 முதல்

3. பாண்டிச்சேரி நியூ இயர் பார்ட்டி – OMG பப் & கிட்சன் – நுழைவுக்கட்டணம் ரூ.2999 முதல்

4. நியோ மியூசிக் ஃபெஸ்ட் 2024 அன்லிமிடெட் – அசோகா பீச் ரெசார்ட் – நுழைவுக்கட்டணம் ரூ.2500 முதல்

5. லகூன் பேஷ் – லகூன் சரோவர் பிரீமியர் – நுழைவுக்கட்டணம் ரூ.4999 முதல்

6. நியூ இயர்’ஸ் ஈவ் புல் மூன் பீச் பார்ட்டி – சான்ட் டியூன்ஸ் பீச் – நுழைவுக்கட்டணம் ரூ.1180 முதல்

7. பே வாட்ச் 2K24 – சாம்பர் ஆஃப் காமர்ஸ் – நுழைவுக்கட்டணம் ரூ.2360 முதல்

8. டெக்கன் கார்னிவல் – பாண்டி மரீனா – நுழைவுக்கட்டணம் ரூ.500 முதல்

9. KEMET 2024 பாண்டிச்சேரி – பிரணவ் பீச் ரெசார்ட் – நுழைவுக்கட்டணம் ரூ.999 முதல்

10. நியூ நோ பாஸ் பார்ட்டி – ஹெய்ஸ்ட் நைட்லைஃப் – நுழைவுக்கட்டணம் ரூ.2999 முதல்

11. நியூ இயர் 2024 கார்னிவல் – அமிட்டி ஸ்கை பிஸ்ட்ரோ – நுழைவுக்கட்டணம் ரூ.500 முதல்

12. எபிக் நியூ இயர் பிக்நைட் – WTF ரெஸ்டோ பப் – நுழைவுக்கட்டணம் ரூ.3499 முதல்

pondicherry new year

ப்ரோமினெட் பீச் இலவச கொண்டாட்டம்

மேற்கூறிய அனைத்து இடங்களுக்கும் நாம் கட்டாயம் செலவு செய்ய வேண்டும். ஆனால் இந்த இடத்திற்கு செல்ல உங்களுக்கு எந்த கட்டணமும் தேவையில்லை. ஏனென்றால் இது முற்றிலும் இலவசம். புதுவை சுற்றுலாத் துறையால் ப்ரோமினெட் கடற்கரையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. புதுவையின் பாதி இளசுகள் கூட்டம் இந்த இடத்தில் தான் வட்டமடிக்குமாம்! இங்கு உற்சாகமான இசை இசைக்கப்படுகிறது, நீங்கள் நடனமாடலாம். புத்தாண்டு பிறக்கும் போது வெடிக்கும் வான வேடிக்கைகளை பார்த்து மகிழலாம். முகம் தெரியாத நண்பர்களுடன் புத்தாண்டு வாழ்த்து சொல்லி சந்தோஷத்தை பரிமாறலாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *