பிள்ளையில்லாத சொத்து என அழுத்தும் உறவுகள், எங்கள் அமைதிக்கு வழி என்ன?

ஆனால், அதிலும் இப்போது ஒரு பிரச்னை. என் கணவர் வீட்டு உறவுகள், என் வீட்டு உறவுகள் என, எங்கள் சொத்து யாருக்கு என்பதில் அவர்களுக்குள் ஒரு மறைமுகப் போட்டி, மோதல் இருந்து வருவதை எங்களால் அறிய முடிகிறது. எங்களுக்குப் பின் இரு தரப்புக்கும் இதுவே ஒரு பிரச்னையாகிவிடாமல் இருக்க வேண்டும் என்ற கவலை இப்போது எங்களைப் பிடித்துக்கொண்டுள்ளது. சொல்லப்போனால், எங்களை உள்ளன்போடு பார்த்துக்கொள்ளும் யாரும், எவரும் எங்கள் இரு வீட்டு உறவுகளிலுமே இல்லை. ‘நாளைக்கே நீங்க படுக்கையில விழுந்தா பார்க்க நாங்கதானே வரணும்… எங்ககிட்ட சொத்தைக் கொடுக்குறதுல உங்களுக்கு என்ன தயக்கம்’ என்ற எண்ணமே இப்போது அவர்களிடம் உள்ளதாகத் தெரிகிறது.

Old age (Representational image)

Old age (Representational image)
Pixabay

என் கணவர், ஊரில் உள்ள சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டு ஏதாவது ஒரு தொண்டு அமைப்புக்குக் கொடுத்துவிட்டு, ஒரு முதியோர் இல்லத்தில் நாம் சேர்ந்துவிடலாம் என்கிறார். நானோ, கடைசிக் காலத்தில் ஊரிலேயே கிடந்துவிடுவோம், இருக்கும் சொத்தை இப்போதே இரு வீட்டு உறவுகளுக்குமாகப் பிரிந்து உயில் எழுதி வைத்துவிடுவோம் என்கிறேன். நாங்கள் என்ன முடிவெடுக்கப் போகிறோம் என்பதில், எங்களைவிட எங்கள் உறவினர்கள் அனைவரும் மிகவும் காத்திருப்புடன் இருக்கிறார்கள்.

வாழ்க்கைதான் சந்தோஷமில்லாமல் போய்விட்டது. அந்திமமாவது அமைதியுடன் முடிய வழி என்ன?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *